அசுர பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்த இதை செய்தால் மட்டுமே முடியும்! ஸ்டாலினை வீழ்த்த ஐடியா கொடுக்கும் TTV
ஜெயலலிதா இறந்த நாளை நன்னாள் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிடுகிறார். அதனை சுற்றி இருப்பவர்களும் வாசிக்கிறார்கள். இது அவர்களின் மன நிலையை காண்பிக்கிறது.
டெல்லியில் நடக்கும் ஜி20 மாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரை சுற்றி உள்ளவர்களின் குணநலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திலேயே வெளிப்பட்டுவிட்டது. ஜெயலலிதா இறந்த நாளை நன்னாள் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிடுகிறார். அதனை சுற்றி இருப்பவர்களும் வாசிக்கிறார்கள். இது அவர்களின் மன நிலையை காண்பிக்கிறது.
இதையும் படிங்க;- உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் இது தான் நடக்கும்.. பங்கமாய் கலாய்க்கும் டிடிவி.தினகரன்..!
யாரோ எழுதி கொடுத்த வார்த்தையை திருத்த கூட இவர்களுக்கு நேரமில்லை, மனமில்லை அல்லது தெரியவில்லை என்று தான் அர்த்தம். இவர்கள் யார் என்பதை ஜெயலலிதா அம்மையாரின் நினைவு நாளில் உலகத்திற்கு காட்டியுள்ளனர். இவற்றை எல்லாம் அங்கு இருக்கக்கூடிய அம்மாவின் உண்மை தொண்டர்கள் யோசிக்க வேண்டும். அசுர பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்துவதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகூட்டணி அமைத்து போராடினால்தான் வெற்றி பெற முடியும். திமுகவை எதிர்த்து நிற்கும் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நின்றால்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், கூட்டணி என்றால் அது காலத்தின் கட்டாயம் என என்றார்.
மேலும், டெல்லியில் நடக்கும் ஜி20 மாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம். அதிமுக ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது. எல்லோரும் குழப்பமான மனநிலையில் உள்ளனர். ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் நான்கு ஆண்டுகள் எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
தேர்தல் நேரத்தில் பல்லாயிரம் கோடி செலவு செய்து மத்திய அரசின் துணையோடு ஆளுங்கட்சியாக வர முடியவில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக வந்துள்ளனர். தற்போது இரட்டை இலைதான் அக்கட்சியின் தலைமை என்பதே உண்மை என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- கருணாநிதி குடும்பம் ஆக்டோபஸ்.. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அரக்கன்.. போற போக்கில் திமுகவை விளாசிய டிடிவி..!