Asianet News TamilAsianet News Tamil

தை அமாவாசை ஸ்பெஷல் - மதுரையிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில் - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா ?

மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தற்போது அறிவித்துள்ளது.

Thai Amavasai Special train from Madurai to Kasi full details here
Author
First Published Dec 13, 2022, 10:26 PM IST

தை அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து காசி உள்ளிட்ட திருத்தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மதுரையில் இருந்து ஜனவரி 16ல் இந்த சிறப்பு சுற்றுலா ரயில் புறப்படுகிறது. ஜனவரி 19ல் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி சக்தி பீடம் தரிசனம், ஜனவரி 20-ல் கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், அன்னபூரணி, ஸ்ரீ விசாலாட்சி சக்தி பீட தரிசனம் செய்யலாம்.

இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

Thai Amavasai Special train from Madurai to Kasi full details here

அன்று மாலை ஆரத்தி, ஜனவரி 21ல் கயாவில் முன்னோர்களுக்கு பிண்ட பூஜை செய்து மங்கள கௌரி சக்தி பீட தரிசனம், ஜனவரி 23ல் காமாக்கியா தேவி சக்தி பீட தரிசனம், ஜனவரி 25ல் கொல்கத்தா காளி தேவி, காளிகாட், பேளூர் மடம், தச்சினேஸ்வரர் தரிசனம், ஜனவரி 26 அன்று ஒடிசா பூரி கொனார்க் சூரிய கோயில், சந்திரபாகா கடற்கரை, பூரி ஜெகநாதர், பிமலா தேவி சக்தி பீடம் தரிசனம் முடித்து ஜனவரி 28-ல் சுற்றுலா ரயில் மதுரை வந்து சேருகிறது.

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி ரயில் கட்டணம் தங்குமிடம், உணவு, உள்ளூர் பேருந்து வசதி ஆகிய உட்பட நபர் ஒருவருக்கு ரூபாய் 21,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர் சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்ய கட்டணம் ரூ. 27,800 வசூக்கப்படுகிறது. பயண சீட்டுகளை www.ularail.com என்ற இணையதளத் திலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 73058-58585 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி.. எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு - பங்கேற்பாரா ? வெளியே கசிந்த தகவல் !

Follow Us:
Download App:
  • android
  • ios