தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி , நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

10:11 PM (IST) Aug 01
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி , நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
03:13 PM (IST) Aug 01
சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
03:06 PM (IST) Aug 01
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க
02:50 PM (IST) Aug 01
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 41 வயது பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து பழனிக்கு திரும்பிய பெண்ணுக்கு உறுதியாகியுள்ளது.
02:47 PM (IST) Aug 01
மக்களவையில் 4 எம்.பி.க்கள் இடைநீக்கம் ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது.
02:46 PM (IST) Aug 01
புதுச்சேரியில் பட்டப்பகலில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
02:21 PM (IST) Aug 01
சென்னை அடுத்த பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தமிழக அரசு இறுதி செய்தது.
02:19 PM (IST) Aug 01
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னையில் மெரினா கடற்கரை அவரது சமாதிக்கு பின்புறம் கடலுக்கு நடுவில் 81 கோடி ரூபாய் மதிப்பு 134 உயரத்திற்கு கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமையவுள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை ஆய்வை மேற்கொள்ள, ஆய்வு எல்லைகளை கோரி மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
02:04 PM (IST) Aug 01
மதுரை கலைஞர் நினைவு நூலகம் கடந்த 8 மாதங்களாக கட்டப்பட்டு வரும் நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது. தற்போது 5வது தளத்தில் பணியாற்றி வந்த மேற்குவங்க தொழிலாளர் இக்பால் கீழே விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
01:45 PM (IST) Aug 01
முதுகுளத்தூரில் பிடிஓவை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்திய அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையை இந்த விசாரணை நடந்து வருகிறது. இதில் ராஜகண்ணப்பன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். மேலும் படிக்க
01:42 PM (IST) Aug 01
திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.30 குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.மேலும் படிக்க
01:08 PM (IST) Aug 01
6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உதவிதொகைக்கான விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், திருத்தங்களை செய்தலை விரைந்து மேற்கொள்ள உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் படிக்க
01:04 PM (IST) Aug 01
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி முதல்வர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மிதான விசாரணை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. கள்ளக்குறிச்சி 12 ஆம் வகுப்பு தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12:57 PM (IST) Aug 01
மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் கடும் காயம் அடைந்துள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
12:48 PM (IST) Aug 01
தேர்தல் ஆணையம் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து அமர்ந்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
மேலும் படிக்க..
12:19 PM (IST) Aug 01
நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் ஆகிய 1089 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டது. தகுதியுடையோர் www.tnpsc.gov எனும் இணையளத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வரும் நவ-6ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்றூ டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க
11:52 AM (IST) Aug 01
மும்பை மாநகரின் புதிய போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் பன்சல்கரை சமீபத்தில் சந்தித்த நடிகர் சல்மான் கான், அவரிடம் தனக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கொடுக்குமாறு விண்ணப்பித்திருந்தார். தற்போது சல்மான் கானின் வேண்டுகோளுக்கு இணங்க அவருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான லைசன்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.மேலும் படிக்க
11:04 AM (IST) Aug 01
புதுச்சேரியில் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி நெல் வியாபாரி ஒருவர் உடல் கருவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
11:03 AM (IST) Aug 01
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் ஈரோட்டில் அமைந்துள்ள மேம்பாலத்தின் பெயர்ப் பலகையை சீர்செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
10:48 AM (IST) Aug 01
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கடலுக்கு அடியில் பேனர் வைத்த இளைஞர்
10:47 AM (IST) Aug 01
கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நம்ம சென்னை பேனருடன் செஸ் விளையாடிய வீரர்கள்!
10:38 AM (IST) Aug 01
கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்;- வன்முறையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஒருவர் துப்பாக்கியை தூக்கிவிட்டால் அந்த நபரிடம் துப்பாக்கியால்தான் நாமும் பேச வேண்டும்.
10:28 AM (IST) Aug 01
கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து, அதே பள்ளிகளில் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு கருத்துருவை தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க
10:26 AM (IST) Aug 01
புதுச்சேரியில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்தவர் மீது 4ஆவது மனைவி போலீசில் புகார் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10:01 AM (IST) Aug 01
பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த், ரன்வீர் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். தான் துபாயில் இருந்து திரும்பியது முதல் எங்கு பார்த்தாலும் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட் பற்றிய பேச்சாகத் தான் இருக்கிறது. இந்த போட்டோஷூட்டில் அவர் மிகவும் ஹேண்ட்சமாக உள்ளார்.மேலும் படிக்க
09:30 AM (IST) Aug 01
சென்னை பெரம்பூரில் வீட்டில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
09:29 AM (IST) Aug 01
என்.எல்.சி. பொறியாளர் பணியிடத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு பற்றி விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. என்.எல்.சி பொறியாளர் பணியிடங்களில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
08:32 AM (IST) Aug 01
தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு பால், மஞ்சள், பன்னீர், தேன் உள்ளிட்டவற்றால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், முருகன், விநாயகருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
08:02 AM (IST) Aug 01
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்து ரூ.2,141க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை.
07:34 AM (IST) Aug 01
முதல் குழந்தை பிறந்து 7 மாதங்களே ஆகும் நிலையில், தற்போது பிரியங்கா - சோப்ரா நிக் ஜோனஸ் தம்பதி அடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ள தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் குழந்தையை போன்றே இந்த குழந்தையையும் வாடகைத் தாய் மூலமே பெற்றுக்கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளார்களாம். மேலும் படிக்க
07:34 AM (IST) Aug 01
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது.
07:32 AM (IST) Aug 01
அதிமுக பொதுக்குழு தொடர்பாக கடந்த 6-ம் தேதி தாங்கள் வழங்கிய தீர்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல், உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
07:31 AM (IST) Aug 01
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம் வென்றுள்ளது. ஆடவர் பளு தூக்குதல் 73 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
07:30 AM (IST) Aug 01
புதுக்கோட்டையில் கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் ஊழியர்கள் ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சக்கரத்தில் கட்டையை போட்டு தேரை நிறுத்த முயன்று விபத்தை ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
07:21 AM (IST) Aug 01
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்து ரூ.2,141க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை.
07:20 AM (IST) Aug 01
சென்னையில் 71வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.