தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விகட்டணம் விலக்கு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.. யாரெல்லாம் தகுதி..?
கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து, அதே பள்ளிகளில் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு கருத்துருவை தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஏராளமான குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர். இவர்களுக்கு நிரந்தர வைப்பு நிதி, கல்விக்கட்டணம் விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய - மாநில அரசுகள் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க:அதிர்ச்சி !! திடீரென்று தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்.. நெல் வியாபாரி சம்பவ இடத்திலே உடல் கருகி பலி..
இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயின்று கொண்டிருப்பின், அவர்களுக்கு கல்வி கட்டணம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தொடர்ந்து அவர்கள் அதே பள்ளியில் பயில்வதை உறுதி செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது
மேலும் தனியார் பள்ளிகள் இந்த கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான கருத்துருவினை உடனடியாக தனியார் பள்ளிக் கட்டணம் நிர்ணயக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:ஈரோடு மேம்பாலத்திற்கு ஜெயலலிதா பெயர்...! ஒன்றரை வருடமாக மூடி வைத்திருப்பது ஏன்..? ஓ.பி.எஸ் ஆவேசம்..