தஞ்சாவூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

03:25 PM (IST) Apr 02
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் 25 ஆம் தேதி வரை மாற்றம் இருக்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
03:21 PM (IST) Apr 02
விடுதலை திரைப்படம் முதல் 2 நாட்களில் ரூ.13 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. அதேபோல் சிம்புவின் பத்து தல திரைப்படமும் ரிலீசான முதல் 3 நாட்களில் 25 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. ஆனால் இந்த இரண்டு படங்களை விட தசரா தான் அதிக அளவு வசூலை அள்ளி உள்ளது. மேலும் படிக்க
03:08 PM (IST) Apr 02
வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
02:23 PM (IST) Apr 02
ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட விடுதலை திரைப்படத்தை குழந்தைகளுடன் வந்து தியேட்டரில் பார்த்த பெண் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் பார்க்க
02:23 PM (IST) Apr 02
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
01:25 PM (IST) Apr 02
அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம் அப்போது விடிவுக்காலம் வரும் நமக்கான எதிர்காலம் காத்துகொண்டு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
01:18 PM (IST) Apr 02
விடுதலை படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி இப்படம் ரிலீஸான முதல் நாளில் ரூ.6.5 கோடி வசூலித்து இருந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே விடுதலை படத்தின் வசூல் முதல் நாளை விட 15 சதவீதம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் படிக்க
01:10 PM (IST) Apr 02
இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகத்தை இந்திய ரூபாயின் மதிப்பிலேயே செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
12:23 PM (IST) Apr 02
சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
11:59 AM (IST) Apr 02
24 மாநிலங்களை சேர்ந்த 70 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11:52 AM (IST) Apr 02
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் விடுதலை திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரி, குறைந்த அளவிலான சம்பளத்தை மட்டுமே வாங்கி உள்ளாராம். மேலும் படிக்க
10:55 AM (IST) Apr 02
சேலத்தில் குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர்.
10:53 AM (IST) Apr 02
ஆடிசன் செய்ய வேண்டும் எனக்கூறி இரவு மசாஜ் செண்டருக்கு வருமாறு கேஸ்டிங் டிரைக்டர் ஒருவர் அழைப்பு விடுத்ததாக பிக்பாஸ் பிரபலம் பகீர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
10:40 AM (IST) Apr 02
கலாஷேத்திர கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான புகாரில் உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் ஹரி பத்மன் தலைமறைவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10:14 AM (IST) Apr 02
சென்னையில் மெட்ரோ ரயில்நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
09:49 AM (IST) Apr 02
டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன், விருது விழாவில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. மேலும் படிக்க
09:42 AM (IST) Apr 02
இன்று 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
09:40 AM (IST) Apr 02
அரசு நிலங்களில் நடைபெறும் மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள சீமான், மண்ணின் வளங்களை காப்பதற்காகப் போராடும் நாம் தமிழர் கட்சியினரை காவல்துறை மூலம் அச்சுறுத்தும் அதிகார அத்துமீறலை திமுக அரசு கைவிட வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
08:55 AM (IST) Apr 02
அனைத்து மதுபான கடைகளுக்கும் ஏப்ரல் 4 ஆம் தேதி விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
08:47 AM (IST) Apr 02
சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு என்றால் ஊடகங்கள் மூலம் அதிலும் சமூக வலைதளங்களில் பிரச்சினை பெரிதாகி விடுவதால் அதனை சரி செய்ய வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் இருந்து ஆவின் பால் பாக்கெட்டுகள் சென்னைக்கு கொண்டு வரப்படுவதாக பால் முகவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
08:47 AM (IST) Apr 02
பாக்யலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து பாப்புலர் ஆன ரேஷ்மா பசுபுலேட்டி, பிரபல நடிகரை பதம் பார்க்கனும் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
08:25 AM (IST) Apr 02
உடன்குடியில் சாதிய வன்கொடுமையில் தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
08:20 AM (IST) Apr 02
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
07:54 AM (IST) Apr 02
சூர்யாவின் கீழடி விசிட் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. நடிகர் சூர்யா நேற்று காலை 9.30 மணிக்கு கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்துள்ளார். வழக்கமாக அங்கு காலை 10 மணி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுமாம். ஆனால் நேற்று சூர்யா குடும்பம் வந்திருந்ததன் காரணமாக சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக பொதுமக்களை உள்ளே அனுமதிக்கவில்லையாம். மேலும் படிக்க
07:43 AM (IST) Apr 02
அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் சுங்கக்கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..