தூய்மை பணியாளர் தற்கொலை..! குற்றவாளிகள் கைது செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியாது- கனிமொழி உறுதி
உடன்குடியில் சாதிய வன்கொடுமையில் தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூய்மை பணியாளர் தற்கொலை
உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தவர் சுடலை மாடன், அவரது பதவி உயர்வு, சாதி குறித்து பேரூராட்சியின் முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி விஷம் குடித்த சுடலைமாடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 23-ந்தேதி சுடலைமாடன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்து உயிரிழந்த தூய்மை பணியாளர் சுடலைமாடன் குடும்பத்திற்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கோவையில் அனைத்து மதுபாட்டில்களும் ரூ.10 உயர்வு; புதிய திட்டத்தால் வருத்தத்தில் மது பிரியர்கள்
கைது செய்யப்படுவது உறுதி
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மை பணியாளர் சுடலைமாடனை சாதி ரீதியாக திட்டிய முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி செயல் அலுவலர் பாபு இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகள் ஊரில் இல்லை தலைமறைவாக உள்ளனர். அவர்களை காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கிருப்பதாக தெரிவித்த அவர், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது, நான் உறுதியாக உள்ளேன். குற்றவாளிகள் கைது செய்யப்படுவதை யாரேனும் தடுத்தால் முதல்வர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என தெரிவித்தார். பேரூராட்சி தலைவர் ஹிமிரா ரமீஷ் பாத்திமா மீதும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்