சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

10:11 PM (IST) Apr 03
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ள 3 நிமிட வீடியோ அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
09:37 PM (IST) Apr 03
நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
08:37 PM (IST) Apr 03
2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் கிஷான் விகாஸ் பத்ரா (KVP) வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
08:30 PM (IST) Apr 03
2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் கிஷான் விகாஸ் பத்ரா (KVP) வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
07:35 PM (IST) Apr 03
உண்மையே எனது ஆயுதம் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
07:14 PM (IST) Apr 03
தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
06:17 PM (IST) Apr 03
கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பான் இந்தியா வெற்றி பெற்றது புஷ்பா திரைப்படம்.
05:19 PM (IST) Apr 03
சென்னையைச் சார்ந்த முத்தமிழ்ச் செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய உள்ளார்.
04:50 PM (IST) Apr 03
காரைக்காலில் ஒன்றை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் பெண் உயிரிழந்துள்ளார்.
04:02 PM (IST) Apr 03
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனை நீட்டித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
03:39 PM (IST) Apr 03
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் மூலம் 7.5 வட்டியைப் பெறலாம்.
02:43 PM (IST) Apr 03
ஏப்ரல் 4 ஆம் தேதி மதுக்கடை, இறைச்சிக்கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
02:25 PM (IST) Apr 03
2019ம் ஆண்டில் இருந்து கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்கு தற்போது அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
02:25 PM (IST) Apr 03
ஈரோட்டில் 13 குழந்தைகளை பெற்ற கூலிதத்தொழிலாளிக்கு 10 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
02:02 PM (IST) Apr 03
நடிகை சமந்தா நடிப்பதாக இருந்த தமிழ் படத்தில் தற்போது அவருக்கு பதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க
11:10 AM (IST) Apr 03
விமானத்தில் செல்லும் போது இடுப்பில் கைவைத்து சில்மிஷம் செய்த நபருக்கு கன்னத்தில் பளார் என அறைவிட்டதாக பாக்யலட்சுமி சீரியல் நடிகை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
09:59 AM (IST) Apr 03
தனியார் சொகுசு பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து துக்கத்தில் இருந்த 17 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
08:49 AM (IST) Apr 03
கலாஷேத்திர கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான புகாரில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஹரிபத்மனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
07:55 AM (IST) Apr 03
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
07:55 AM (IST) Apr 03
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்கிறார். நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்காக இன்று சூரத் செல்கிறார்.
07:17 AM (IST) Apr 03
அதிமுகவில் தொண்டர் கூட முதல்வர், பொதுச்செயலாளர் பதவிக்கு வரமுடியும் அதற்கு நானே சாட்சியாக உள்ளேன் என சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.