Asianet News TamilAsianet News Tamil

அப்பாடா.. 10 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு 13 குழந்தைகள் பெற்றவருக்கு குடும்ப கட்டுப்பாடு..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஒன்னகரை என்ற கிராமத்தை சேர்ந்தவர் சின்ன மாதையன்(45). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி(42). இந்த தம்பதிக்கு 7 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்கைள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர்.

Family planning for a father of 13 children in Erode
Author
First Published Apr 3, 2023, 1:59 PM IST

ஈரோட்டில் 13 குழந்தைகளை பெற்ற கூலிதத்தொழிலாளிக்கு 10 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஒன்னகரை என்ற கிராமத்தை சேர்ந்தவர் சின்ன மாதையன்(45). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி(42). இந்த தம்பதிக்கு 7 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்கைள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு கடைசியாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு 13-வதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இதையும் படிங்க;- ரன்னிங்கில் இருந்த சொகுசு பேருந்தில் திடீர் தீ விபத்து! அலறிய 17 பயணிகள்! உயிர் தப்பியது எப்படி?பரபரப்பு தகவல்

Family planning for a father of 13 children in Erode

13 குழந்தைகள் பெற்றதால் குழந்தைகளின் தாய் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டார். ஆகையால், இந்த தம்பதிக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் முயற்சி செய்துள்ளனர். ஆனால், பயம் காரணமாக சின்ன மாதையன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். எப்போதெல்லாம் மருத்துவக்குழு வருகிறதோ அப்போது எல்லாம் வனப்பகுதியில் ஓடி ஒளிந்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழுவினர் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. 

இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்! திடீரென தமிழகத்தில் எகிறிய கொரோனா பாதிப்பு! எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா?

Family planning for a father of 13 children in Erode

இந்நிலையில், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை குறித்து மருத்துவ குழுவினர் சின்ன மாதையனிடம் விளக்கியுள்ளனர்.  மேலும், மீண்டும் மனைவி கர்ப்பம் அடைந்தால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்தும் மருத்துவக் குழுவினர் விளக்கினர். இதனையடுத்து, ஒருவழியாக சின்ன மாதையன் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சின்ன மாதையனுக்கு ஒருவழியாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருத்தடை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. பின்னர், அவருக்கு ஊக்கத்தொகையும் அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் குழுவினர் அவரது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டு வந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios