Rahul Gandhi: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் ஜாமீன் நீட்டிப்பு.. சூரத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனை நீட்டித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் தனது கருத்துக்கு எதிரான தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் ராகுல் காந்தி. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே ராகுல் காந்தி இன்று சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு வந்தார்.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஜாமீனை சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தலைவர் மேல்முறையீடு செய்ததை அடுத்து அடுத்த விசாரணை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு தேதியை தள்ளி வைத்துள்ளது.
இதையும் படிங்க..ஏப்ரல் 4ம் தேதி விடுமுறை.. மதுக்கடை, இறைச்சிக்கடை இயங்காது.! முழு விபரம்
அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முதல்வர்கள் பூபேஷ் பாகேல், சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் உடன் சென்றனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ராஜ்யசபா காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் ஆகியோரும் இருந்தனர். இதுகுறித்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நீதித்துறையை அச்சுறுத்தும் வகையில் காங்கிரஸ் நாடகம் ஆடுகிறது. இதை நான் கண்டிக்கிறேன்” என்று கூறினார்.
அதேபோல மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “பிற்படுத்தப்பட்டவர்களை இழிவுபடுத்துவதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது. முன்பு, பி.வி.நரசிம்மராவ், ப.சிதம்பரம், டி.கே.சிவக்குமார் ஆகியோர் சிறைக்குச் சென்றார்கள். அவர்களுடன் எத்தனை காங்கிரசார் சென்றார்கள்? நாட்டை விட ஒரு குடும்பம் பெரியதா?” என்று அனுராக் தாகூர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா