‘ரூ.48,20,69,00,00,000..’காங்கிரஸ் செய்த ஊழல் வீடியோவை பாருங்க - வச்சு செய்யும் பாஜக.!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ள 3 நிமிட வீடியோ அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மக்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை காங்கிரஸ் கொள்ளையடித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி (BJP) ஞாயிற்றுக்கிழமை ஒரு வீடியோவை வெளியிட்டது. அதனை 'காங்கிரஸ் கோப்புகள்' என்று பெயரிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 3 நிமிட வீடியோவைப் பகிர்ந்துள்ள பாஜக, “காங்கிரஸ் கோப்புகளின் முதல் எபிசோடில், காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மற்றும் மோசடிகள் ஒன்றன் பின் ஒன்றாக எப்படி நடந்தன என்பதைப் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
மேலும், மக்கள் பாக்கெட்டில் இருந்து காங்கிரஸ் கொள்ளையடிப்பதாக பாஜக குற்றம் சாட்டிய மிகப் பெரிய எண்ணிக்கையைக் குறிப்பிட்டு வீடியோ தொடங்குகிறது. தொடக்கக் காட்சியில் ரூ.48,20,69,00,00,000 என்ற எண்ணிக்கை சொல்லப்படுகிறது. காங்கிரஸ் தனது 70 ஆண்டுகால ஆட்சியில், "பணமோசடி மற்றும் ஊழலின் மூலம்" மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் "ரூ. 48,20,69,00,00,000" கொள்ளையடித்ததாக பாஜக குற்றம் சாட்டுகிறது.
அந்த வீடியோவில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பணத்தைப் பயன்படுத்தி, 24 ஐஎன்எஸ் விக்ராந்த், 300 ரஃபேல் ஜெட் மற்றும் 1,000 மங்கள் மிஷன்களை தயாரித்திருக்கலாம் அல்லது வாங்கலாம். ஆனால் நாடு காங்கிரஸின் ஊழலைச் சுமக்க வேண்டியிருந்தது. எனவே அது முன்னேற்றப் பந்தயத்தில் பின்தங்கியது.
இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா
1.86 லட்சம் கோடி நிலக்கரி ஊழல், 1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், போன்றவை என்று அந்த வீடியோ கூறுகிறது. மேலும், 10 லட்சம் கோடி MNREGA ஊழல், 70,000 கோடி காமன்வெல்த் ஊழல், இத்தாலியுடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் 362 கோடி லஞ்சம், ரயில்வே வாரியத் தலைவருக்கு 12 கோடி லஞ்சம் என்று அந்த வீடியோ நீள்கிறது.
அதானி - ஹிண்டென்பர்க் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ள நேரத்தில் பாஜகவின் அட்டாக் தொடங்கியுள்ளது. அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டு சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு எதிராக பாஜக சதி செய்வதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க..எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ் பெண்.. ஊக்கப்படுத்திய தமிழக அரசு !!
இதையும் படிங்க..ஏப்ரல் 4ம் தேதி விடுமுறை.. மதுக்கடை, இறைச்சிக்கடை இயங்காது.! முழு விபரம்