Asianet News TamilAsianet News Tamil

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ் பெண்.. ஊக்கப்படுத்திய தமிழக அரசு !!

சென்னையைச் சார்ந்த முத்தமிழ்ச் செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய உள்ளார்.

First Tamil woman to climb Mount Everest
Author
First Published Apr 3, 2023, 5:10 PM IST

சென்னையைச் சார்ந்த முத்தமிழ்ச் செல்வி என்பவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க உள்ளார்.

2023-ஆம் ஆண்டு ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்படும் தேர்வு செய்யப்பட்டுள்ள குழுவினருடன் இணைந்து உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய உள்ளார். 

First Tamil woman to climb Mount Everest

நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளது இந்த நிகழ்ச்சி. இதில்  உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு அரசு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை 28.03.2023 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

இதையும் படிங்க..ஏப்ரல் 4ம் தேதி விடுமுறை.. மதுக்கடை, இறைச்சிக்கடை இயங்காது.! முழு விபரம்

First Tamil woman to climb Mount Everest

இந்நிலையில் சிகரம் ஏறுவதற்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுவதால் மேலும் நிதியுதவி வழங்கிடுமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து தன்னார்வலர்கள் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

வீராங்கனைக்கு முத்தமிழ்ச் செல்வி பேசிய போது, “எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் நான். எனது கனவை நனவாக்கும் வகையில் நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா

Follow Us:
Download App:
  • android
  • ios