நெல்லை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. தமிழக அரசு எடுத்த முடிவுக்கு காரணம் இதுதான் !!
நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். இவர் தனக்கு கீழ் வரும் அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு அழைத்து வந்து பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது.
விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை நடத்திய நிலையில் நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன், நெல்லை மாவட்ட எஸ்.பியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் சரவணன், 2001-ல் டிஎஸ்பியாக தேர்வு பெற்றவர். விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிஎஸ்பியாக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் 2009 ஆம் ஆண்டு ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று தருமபுரி, சேலம் பகுதிகளில் பணிபுரிந்தார்.
இதையும் படிங்க..ஏப்ரல் 4ம் தேதி விடுமுறை.. மதுக்கடை, இறைச்சிக்கடை இயங்காது.! முழு விபரம்
2011 ஆம் ஆண்டில் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று கடலூர் மாவட்டத்திலும், உளவுத்துறையிலும், சென்னை யில் போலீஸ் நிர்வாக பிரிவிலும் பணியாற்றியுள்ளார். திருநெல்வேலி எஸ்.பி ஆக சரவணன் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பொறுப்பேற்றவர் ஆவார். நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா
இதையும் படிங்க..எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ் பெண்.. ஊக்கப்படுத்திய தமிழக அரசு !!