Published : Feb 26, 2025, 12:18 AM ISTUpdated : Feb 26, 2025, 10:51 PM IST

Tamil News Live today 26 February 2025: தவெக ஆண்டு விழா!

சுருக்கம்

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று காலை 7.45 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தேர்தல் வியூக வகுப்பாளரும்,  ஜன்சுராஜ் கட்சியின் தலைவருமான பிரஷாந்த் கிஷோரும் வருகை தந்துள்ளார். விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tamil News Live today 26 February 2025: தவெக ஆண்டு விழா!

10:51 PM (IST) Feb 26

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்! 8 ரன்களில் த்ரில் வெற்றி!

பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் படிக்க

09:46 PM (IST) Feb 26

பட்ஜெட் விலையில் ஆடம்பரமான 7 சீட்டர் SUV கார் - Mahindra Bolero Neo

நாட்டில் 7 சீட்டர் கார்களுக்கான தேவை அதிகம் உள்ள நிலையில் பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய மஹிந்திரா பொலிலோ நியோ பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

09:32 PM (IST) Feb 26

ஈஷா மஹா சிவராத்திரி விழா பக்தியின் மஹா கும்பமேளா: உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம்!

Amit Shah on Maha Shivratri: கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மஹாசிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இவ்விழா பக்தியின் மஹாகும்பமேளா போன்று இருப்பதாக அவர் புகழாரம் சூட்டினார்.

மேலும் படிக்க

09:01 PM (IST) Feb 26

எஸ் ஜே சூர்யாவின் வரி ஏய்ப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

வரி ஏய்ப்பு செய்ததாக எஸ்ஜே சூர்யாவிற்கு எதிராக வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கிற்கு எதிராக தாக்கல் செய்த அவரது மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
 

மேலும் படிக்க

08:35 PM (IST) Feb 26

10 வருடத்தில் தமிழகத்துக்கு 5 லட்சம் கோடி நிதி வழங்கினோம்; மு.க. ஸ்டாலினுக்கு அமித் ஷா பதிலடி!

Amit Shah in Coimbatore: தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்ட, அமித் ஷா அதை மறுத்துள்ளார். மேலும், திமுக அரசு ஊழல் மலிந்த ஆட்சி நடத்துவதாகவும், தேச விரோத சக்திகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க

08:17 PM (IST) Feb 26

அள்ள அள்ள பணம் கொட்ட; இந்த '1' பொருளை வீட்டில் வாங்கி வைங்க!

Vastu Tips For Money Problem : நிதி நெருக்கடி, கடன் பிரச்சனை மற்றும் அதிகப்படியான செலவுகளால் நீங்கள் ரொம்பவே சிரமப்படுகிறீர்கள் என்றால், வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த பொருட்களை வீட்டில் வாங்கி வையுங்கள்.

மேலும் படிக்க

08:08 PM (IST) Feb 26

நகை விஷயத்தில் வெளியே வந்த உண்மை - பாண்டியனிடம் ராஜீ கேட்ட கேள்வி? பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!

நகையை திருடியது யார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட பாண்டியன், கதிர் மீது எந்த தப்பும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டு பெருமை படும் காட்சி தான் இன்று ஒளிபரப்பாகி உள்ளது.
 

மேலும் படிக்க

08:07 PM (IST) Feb 26

சம்மர் வந்தாச்சு...மக்களே இந்த பழம் கிடைத்தால் விட்டுடாதீங்க

உடல் எடையை குறைப்பதில் சீசன் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படி உடல் எடை குறைப்பிற்கு பயன்படும் மிக முக்கியமான கோடை கால பழத்தை பற்றியும், அதில் உள்ள சத்துக்கள் பற்றியும், அது எவ்வாறு உடல் எடை குறைப்பில் பயன்படுகிறது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

08:01 PM (IST) Feb 26

மக்களே உஷார்...இந்த 8 உணவுகளை சூடுபடுத்தினால் விஷமாக மாறிவிடும்

சில உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து சூடு செய்தோ அல்லது அடிக்கடி சூடு செய்தோ சாப்பிடும் போது அந்த உணவு விஷயத்தன்மையானதாக மாறி நம்முடைய உடலுக்கு பல விதமான கேடுகளை விளைவிக்கும். இது போல் மீண்டும் சூடுபடுத்தினால் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் எவை என்பதை தெரிந்து கொண்டு அவற்றை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க

08:00 PM (IST) Feb 26

பெங்களூரு : தண்ணீரை வீணடித்ததற்காக 112 வழக்கு பதிவு; ரூ.5.6 லட்சம் அபராதம் விதிப்பு!

பெங்களூருவில் குடிநீர் வீணாவதை தடுக்க BWSSB தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம் 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் நீர் பற்றாக்குறையை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என BWSSB தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க

07:50 PM (IST) Feb 26

புரத சத்து கிடைக்க சிக்கன் தான் சாப்பிடணுமா? இந்த 6 சைவ உணவு இருக்கே

 தினசரி உணவில் இந்த 6 முக்கிய புரத உணவுகளை சேர்த்தால், உடல் ஆரோக்கியமாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்கும். புரதம் நிறைந்த சைவ உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். சைவ உணவு சாப்பிடுபவர்கள் எந்தெந்த உணவுகளை தினமும் சேர்த்துக் கொண்டால் புரத சத்துக்கள் அதிகம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

07:39 PM (IST) Feb 26

ரகசிய குறியீட்டு மொழியில் பேசும் AI அசிஸ்டெண்ட்! அதிர்ச்சியூட்டும் வீடியோ!

சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் வீடியோ, செயற்கை நுண்ணறிவு மனித கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. திருமண முன்பதிவு குறித்து பேசிய AI அசிஸ்டெண்ட்கள், ஜிபர் லிங்க் (GibberLink Mode) மூலம் ரகசிய சங்கேத மொழியில் உரையாடுகின்றனர். இது, மனிதர்களின் தலையீடு இல்லாமல் AI செயல்படக்கூடும் என்ற கவலையை எழுப்புகிறது. எலான் மஸ்க் போன்றோரின் எச்சரிக்கைகளை இது எதிரொலிக்கிறது.

மேலும் படிக்க

07:35 PM (IST) Feb 26

உலர் அத்திப்பழம் சூப்பர் ஃபுட்....எப்படின்னு தெரியுமா ?

அத்திப்பழம் ஒரு இயற்கையான மருத்துவ உணவு. இது செரிமானம், இரத்தசோகை, எலும்பு வலிமை, இதய ஆரோக்கியம், மன நலன் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணமாக செயல்படும்.  அத்திப் பழத்தை எப்படி சாப்பிட்டால் நல்லது, அத்திப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? இது யாருக்கெல்லாம் நல்லது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

07:32 PM (IST) Feb 26

Top 5 Serial Villi Actress: சன் டிவி சீரியலில் கொடூர வில்லியாக மிரட்டும் 5 நடிகைகள்!

சீரியலில், எப்படி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு, வில்லி கதாபாத்திரமும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் சீரியலில் மிரட்டும் 5 சன் டிவி வில்லிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
 

மேலும் படிக்க

07:24 PM (IST) Feb 26

மலச் சிக்கல் பெரும் சிக்கல்...ஈஸியா சரி செய்ய இதோ வழி இருக்கு

மலச்சிக்கல் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனையாகும். இதற்கு பல விதமான காரணங்கள் உள்ளன. ஆனால் இவற்றை அலட்சியப்படுத்தினால் அது நாளடைவில் மிகப் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். மலச்சிக்கலை நாம் தினசரி உண்ணும் உணவுகள் மூலமாகவே எளிமையான முறையில் சரி செய்யலாம். மலர்ச்சிக்கலை போக்க என்ன சாப்பிட வேண்டும்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

07:22 PM (IST) Feb 26

ஜிம் போகாமலே ஈசியா உடல் எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?

உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்லாமலேயே, வெறும் ஆறு விஷயங்களைச் செய்வதன் மூலம், உடல் எடையை எளிதாகக் குறைப்பது மட்டுமல்லாமல், பெல்லி ஃபேட்டையும் குறைக்கலாம். மேலும்.. அது எப்படி என்று தெரிந்து கொள்வோமா...

மேலும் படிக்க

07:19 PM (IST) Feb 26

9 வருட திருமண வாழ்க்கைக்கு எண்டு கார்டு போடும் அமன் வர்மா – வந்தனா லால்வானி!

07:19 PM (IST) Feb 26

புதிய வௌவால் வைரஸ் HKU5-CoV-2! அடுத்த பெருந்தொற்றுநோய் நெருங்கி வருகிறதா?

சீன விஞ்ஞானிகள் புதிய வௌவால் வைரஸ் HKU5-CoV-2 மனிதர்களுக்குப் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். இது கோவிட்-19 போன்ற மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையை எழுப்பியுள்ளது, இருப்பினும் கண்காணிப்பு அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க

07:11 PM (IST) Feb 26

குழந்தைகளின் டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சத்தான உணவுகள்

நல்ல உணவுப் பழக்கம் குழந்தைகளின் எதிர்கால உடல்நலத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் அடிப்படையானதாகும். ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளின் உணவுப் பட்டியலில் சேர்த்து, அவர்களின் எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்வது அவசியம். அதற்கு குழந்தைகளின் உணவில் தினமும் கண்டிப்பாக இருக்க வேண்டிய உணவுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
 

மேலும் படிக்க

06:55 PM (IST) Feb 26

விரைவில் ஐபோன் 17 ரிலீஸ்! டிசைன், ஹார்டுவேரில் வெற லெவல் அப்டேட்!

iPhone 17 Series Update: ஆப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸில் மெலிதான ஐபோன் 17 ஏர் உள்பட அனைத்து மாடல்களும் A19 சிப் மற்றும் ப்ரோமோஷன் டிஸ்ப்ளேயுடன் பெரிய வடிவமைப்பு மற்றும் ஹார்டுவேர் அட்பேட்களைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க

06:54 PM (IST) Feb 26

பளபளன்னு மின்னும் முகம் வேணுமா? ...கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க

அனைத்து நோய்களுக்கும் தீர்வாக கற்றாழை விளங்குவதாக மருத்துவம் சொல்கிறது. இதை சாப்பிட்டாலும், ஜூஸ் செய்து குடித்தாலும் கண் பார்வை, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கும் நன்மை தருவதாக சொல்லப்படுகிறது. இந்த கற்றாழையை முக அழகிற்காக, தோல் பராமரிப்பிற்காக எப்படி பயன்படுத்த வேண்டும்? பளபளக்கும் முக அழகை பெற கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்

மேலும் படிக்க

06:41 PM (IST) Feb 26

நாட்டாமை தெலுங்கு ரீமேக்கிற்கு பிறகு ஏன் ரஜினிகாந்த் தெலுங்கில் நடிக்கவில்லை?

06:35 PM (IST) Feb 26

தென்மாவட்டங்களில் பணிபுரிய ஆசையா? அரசு & சுயநிதி பிரிவுகளில் உதவிப் பேராசிரியர் வேலை

06:27 PM (IST) Feb 26

சென்னையில் அரசு வேலை: ICMR-NIE-ல் உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் அறிவிப்பு!

06:27 PM (IST) Feb 26

இன்னும் இரண்டே நாள் தான்! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வேலை! லட்சக்கணக்கில் சம்பளம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 109 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி கடைசி நாளாகும். 

மேலும் படிக்க

06:12 PM (IST) Feb 26

திமுகவை மட்டுமல்ல.. விஜய்யையும் பங்கமாக கலாய்த்த அண்ணமலை!

அமைச்சர் அமித்ஷா வருகை, திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம், மற்றும் விஜய் குறித்த கருத்துக்களை அண்ணாமலை தெரிவித்தார். 2026ல் திமுக ஆட்சிக்கு வராது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க

05:58 PM (IST) Feb 26

சன் குடும்பம் விருதுகள் 2025 : சிறந்த சீரியல் எது? பெஸ்ட் ஜோடி யார்? வின்னர் லிஸ்ட் இதோ

2025ம் ஆண்டுக்கான சன் குடும்பம் விருதுகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதில் வெற்றி பெற்றவர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:52 PM (IST) Feb 26

விரைவில் வருகிறது ஆப்பிள் ஃபோல்டபிள் ஐஃபோன்

05:45 PM (IST) Feb 26

டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டில் சிறப்பு அம்சம் என்ன? இந்தியர்களுக்கு பாதிப்பு வருமா?

How Gold Card visa is different from EB-5 Card and Green Card: டொனால்டு டிரம்ப் அமெரிக்க குடியுரிமைக்கு கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்துள்ளார், இதன் மூலம் 5 மில்லியன் டாலர்கள் செலவழித்து குடியுரிமை பெறலாம். இது EB-5 விசா திட்டத்தை மாற்றியமைக்கும் என்றும், கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

05:43 PM (IST) Feb 26

உபியின் வளர்ச்சி ரகசியங்களை வெளியிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத்!

05:04 PM (IST) Feb 26

கோடிகளை கொட்டியும் சொதப்பும் அனிருத்; சீப் அண்ட் பெஸ்டாக மாஸ் காட்டும் ஜிவி! கைவசம் இத்தனை படங்களா?

தமிழ் திரையுலகில் அனிருத்தை காட்டிலும் பிசியான இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் குமார் வலம் வருகிறார். அவர் கைவசம் உள்ள படங்கள் பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:02 PM (IST) Feb 26

ஆயுஷ்மான் பாரத் முதல் மருத்துவக் கல்லூரி வரை: உபியில் சுகாதார சூழ்நிலை மாறி வருகிறதா?

05:01 PM (IST) Feb 26

2026-ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும்; அமித்ஷா உறுதி!

தமிழகத்தில் திமுக அரசு ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளதாக அமித் ஷா சாடியுள்ளார். மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி மறுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டை அவர் மறுத்தார், மேலும் 2026-ல் பாஜக ஆட்சி அமைக்கும் என்றார்.

மேலும் படிக்க

04:59 PM (IST) Feb 26

பெரியவர்களை போல 'குழந்தைகள்' தலையணை வைத்து தூங்கலாமா? முக்கிய தகவல்

Parenting Tips : குழந்தை தூங்கும் போது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானதா? இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இங்கு காணலாம்.

மேலும் படிக்க

04:58 PM (IST) Feb 26

எதுக்கு தயங்குறீங்க? இதெல்லாம் சரிப்பட்டு வராது! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுக! அன்புமணி ராமதாஸ்!

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் திமுக அரசு குறுகிய அரசியல் லாபங்களுக்காக மக்களின் உணர்வுகளை மதிக்க மறுக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

04:33 PM (IST) Feb 26

அமெரிக்க குடியுரிமை பெற 'கோல்டு கார்டு' திட்டம்! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பணக்கார வெளிநாட்டினருக்காக 'கோல்டு கார்டு' திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் 5 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தி அமெரிக்க குடியுரிமையைப் பெறலாம்.

மேலும் படிக்க

04:31 PM (IST) Feb 26

#TVK 2ஆம் ஆண்டு விழாவில் விஜய்!!

04:16 PM (IST) Feb 26

மக்கானா என்ற தாமரை விதைகள்.. பிரதமர் மோடி விரும்பி உண்ணக் காரணம் இதுதான்!! 

Makhana Health Benefits : ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 300 நாட்கள் கூட மக்கானா எனும் தாமரை விதைகளை பிரதமர் மோடி விரும்பி சாப்பிடுவாராம்.  

மேலும் படிக்க

04:00 PM (IST) Feb 26

Poco M7 5G மார்ச் 2025-ல் வருது : விலை கம்மியா இருக்கும் - இப்பவே அலப்பறை தொடங்கிடுச்சு!

Poco M7 5G அடுத்த மாசம் இந்தியாவுல Poco M6 5G-க்கு பதிலா வருது. இதுல Snapdragon 4 Gen 2 SoC, உடன் வரும் இது Flipkart-ல் ரூ.10,000-க்கு கீழ கிடைக்கும்.

மேலும் படிக்க

03:53 PM (IST) Feb 26

மன்னத் வீட்டை விட்டு வெளியேறி தமிழ் பட ஹீரோயின் வீட்டில் வாடகைக்கு குடியேறும் ஷாருக்கான்! ஏன்?

ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் மன்னத் வீட்டை விட்டு வெளியேறி மாதம் வாடகை வீட்டில் வசிக்க போவதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

மேலும் படிக்க

More Trending News