MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • விரைவில் ஐபோன் 17 ரிலீஸ்! டிசைன், ஹார்டுவேரில் வெற லெவல் அப்டேட்!

விரைவில் ஐபோன் 17 ரிலீஸ்! டிசைன், ஹார்டுவேரில் வெற லெவல் அப்டேட்!

iPhone 17 Series Update: ஆப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸில் மெலிதான ஐபோன் 17 ஏர் உள்பட அனைத்து மாடல்களும் A19 சிப் மற்றும் ப்ரோமோஷன் டிஸ்ப்ளேயுடன் பெரிய வடிவமைப்பு மற்றும் ஹார்டுவேர் அட்பேட்களைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

3 Min read
Author : SG Balan
| Updated : Feb 27 2025, 12:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
iPhone 17 series

iPhone 17 series

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸை ஐபோன் 16e உடன் நிறைவு செய்துள்ளது. ஐபோன் 16e ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை ஐபோனாகவும் உள்ளது. ஐபோன் 16 சீரிஸ் இப்போது சந்தைகளில் நன்றாக விற்பனையாகி வரும் நிலையில், ஐபோன் 17 சீரிஸ் பற்றிய கணிப்புகள் சூடுபிடித்துள்ளன.

அடுத்த தலைமுறை ஐபோன், வழக்கமான நடைமுறைப்படி சில குறிப்பிடத்தக்க மேம்பாடுகளுடன் செப்டம்பரில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 17 ஏர், புதிய சிப்செட் மற்றும் முக்கிய கேமரா மேம்பாடுகளுடன், ஐபோன் 17 சீரிஸ் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
iPhone 17 Air

iPhone 17 Air

ஐபோன் 17 சீரிஸில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய மாடலான ஐபோன் 17 ஏர் மொபைலை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது என வதந்தி பரவியுள்ளது. இந்த மாடல் தற்போதைய ஐபோன் 16 பிளஸின் வாரிசு என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது பிளஸ் மாடலைவிட மெலிதான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஐபோன் 17 ஏர் 5 மிமீ முதல் 6.25 மிமீ வரை தடிமன் கொண்டதாக இருக்கும், மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு மெலிதான ஐபோனாக இருக்கும். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய ஐபோன் 16 ப்ரோ 8.25 மிமீ தடிமன் கொண்டது. இத்துடன் ஒப்பிடுகையில், ஐபோன் 17 ஏர் வடிவமைப்பு ரீதியாக வியக்க வைக்கும் மாற்றத்தைக் கொண்டதாக இருக்கலாம். ஐபோன் 17 ஏர் 6.6 இன்ச் டிஸ்ப்ளேயுடன் பின்புறத்தில் ஒரே ஒரு கேமரா மட்டுமே பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொபைலின் மெலிதான வடிவமைப்புக்கு இது அவசியம் என்று கருதுவதாகத் தெரிகிறது. இதனால், ஐபோன் 17 ஏர் பேட்டரியும் ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்க வாய்ப்பு உள்ளது.

35
Slimmest iPhone ever

Slimmest iPhone ever

ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ஏர் இரண்டும் ஆப்பிளின் அடுத்த தலைமுறை சிப்செட்டான A19 உடன் இன்-ஹவுஸ் மோடத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக சமீபத்தில் வெளியான ஐபோன் 16e ஆப்பிளின் முதல் இன்-ஹவுஸ் செல்லுலார் மோடம் - C1 உடன் அறிமுகமாகி இருக்கிறது. எனவே, ஆப்பிள் தனது சொந்த மோடத்துடன் ஐபோன் 17 சீரிஸை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

ஐபோன் 17 ஏர் மாடலில் சிம் ட்ரே இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. இது ஆப்பிள் நிறுவனம் eSIM தொழில்நுட்பத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருவதன் அறிகுறியாக இருக்கலாம்.

45
ProMotion technology

ProMotion technology

ஐபோன் 17 பற்றி மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றொரு செய்தி அதன் டிஸ்பிளே தொடர்பானது. 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்ட ப்ரோ-மோஷன் தொழில்நுட்பம் இனி ப்ரோ மாடல்களுக்கு மட்டுமானதாக இருக்காது. ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ஏர் உட்பட ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் அனைத்திலும் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய செராமிக் ஷீல்ட் தொழில்நுட்பத்தை விட கீறல்-எதிர்ப்பு மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய பிரதிபலிப்பு எதிர்ப்பு கோட்டிங் இந்த டிஸ்பிளேகளில் இடம்பெறுவதாகவும் தகவல் பரவியுள்ளது.

55
iPhone 17 Pro

iPhone 17 Pro

ஐபோன் 17 ஏர் பற்றிய வதந்திகள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில், ப்ரீமியம் மாடல்களான ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இரண்டும் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களைப் பெற வாய்ப்புள்ளது. அதிகம் பேசப்படும் மாற்றங்களில் ஒன்று, ப்ரோ மாடல்களுக்கான ஃபிரேம்கள் டைட்டானியத்திலிருந்து அலுமினியத்திற்கு மாறுவது. இதுவும் எடையைக் குறைக்கும் உத்தியாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. போனின் ஆயுளை மேம்படுத்தவும் ஆப்பிள் அலுமினிய ஃபிரேமை மீண்டும் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

ப்ரோ மாடல்கள் பாதி கண்ணாடி மீதி அலுமினியத்தால் ஆன பின்புறத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணாடி பகுதி மேக்சேஃப் சார்ஜிங்கிற்கான (MagSafe charging) ஆதரவைத் அளிக்கும். ஐபோன் 17 ப்ரோ மற்றும் புரோ மேக்ஸிலிருந்து எதிர்பார்க்கப்படும் மற்றொரு பெரிய மாற்றம், கேமராவில் தான். ஆப்பிள் தற்போதைய சதுர வடிவமைப்பை மாற்றி, கிடைமட்டமாக மாத்திரை வடிவ கேமரா பம்பிற்கு மாறுவதாகக் கூறப்படுகிறது.

ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ கேமராக்களை தொழில்முறை கேமராக்களைப் போலவே திறன் கொண்டதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் ஐபோன் 17 பயனர்களுக்கு வீடியோ பதிவுக்கு சக்திவாய்ந்த கேமரா கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக, புரோ மேக்ஸ் மாடலில் 48 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய 12 மெகாபிக்சல் சென்சாரிலிருந்து குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாகும். இத்துடன், ஐபோன் 17 ப்ரோ மற்றும் புரோ மேக்ஸ் ஆகியவற்றில் புதிய பிசின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், அவை எளிதாக மாற்றக்கூடிய பேட்டரிகளைக் கொண்டிருக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஐபோன் 17 ஏர்
iPhone 17 வரிசை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
அமேசான் சேல் வருது... இப்பவே செல்போன் வாங்காதீங்க..! இந்த போன்களின் விலை அதிரடியாக குறையலாம்..!
Recommended image2
50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
Recommended image3
Recharge plans : நோ டேட்டா... ஒன்லி கால்ஸ்..! டிராய் கொண்டுவரும் புதிய ரீசார்ஜ் பிளான்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved