அள்ள அள்ள பணம் கொட்ட; இந்த '1' பொருளை வீட்டில் வாங்கி வைங்க!
Vastu Tips For Money Problem : நிதி நெருக்கடி, கடன் பிரச்சனை மற்றும் அதிகப்படியான செலவுகளால் நீங்கள் ரொம்பவே சிரமப்படுகிறீர்கள் என்றால், வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த பொருட்களை வீட்டில் வாங்கி வையுங்கள்.

அள்ள அள்ள பணம் கொட்ட; இந்த '1' பொருளை வீட்டில் வாங்கி வைங்க!
சில சமயங்களில் வீட்டில் எதிர்மறை சக்தி இருந்தால் எல்லா வகையான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அவற்றில் ஒன்றுதான் பணப்பற்றாக்குறை அல்லது நிதி நெருக்கடி. ஆனால் இந்த பிரச்சனையில் இருந்து பயப்படுவதற்கான தீர்வுகள் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. எனவே, வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றினால் வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கி மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில் நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க வாஸ்து சாஸ்திரத்தின் படி இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கி வீட்டில் வையுங்கள். அது என்னென்ன பொருட்கள் என்று இப்போது பார்க்கலாம்.
வெள்ளி யானை சிலை:
பொதுவாக வீட்டை அழகாக காட்டுவதற்காக பலவகையான பொருட்களை வாங்கி வைத்திருப்போம். வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் வெள்ளி யானை சிலையை வாங்கி வைப்பது பெரிதும் பயனளிக்கும். ஆம், யானை வலிமை செழிப்பு மற்றும் சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது மேலும் இது சிறப்பு மதம் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன. விஷ்ணு மற்றும் லட்சுமிதேவி யானையை ரொம்பவே நேசிக்கிறார்கள். யானை விநாயகர் வடிவமாகவும் கருதப்படுகின்றது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் வெள்ளி யானை சிலையை வைத்ரால் ராகு கிரகத்தின் அனுமதித்து செல்வம் அதிகரிக்கும்.
மீன் சிலை
மீன் சிலை ஆரோக்கியம், வலிமை, செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆகும். எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி வெள்ளி அல்லது பித்தளையாலான மீன் சிலையை வீட்டில் வாங்கி வைத்தால் மிகவும் நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. முக்கியமாக அதை உங்கள் வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களால் உலோகத்தால் ஆன மீன் சிலையை வாங்க முடியவில்லை என்றால், வீட்டில் ஒரு ஜோடி மீனின் ஓவியத்தையாவது வாங்கி வைக்கவும்.
புல்லாங்குழல்
வீட்டில் புல்லாங்குழல் வைத்திருந்தால் அதனால் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. ஏனெனில் புல்லாங்குழல் செல்வத்தை ஈர்க்கும். எனவே உங்களது வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் புல்லாங்குழல் வைக்கவும்.
இதையும் படிங்க: Vastu Tips : பணத்தை எண்ணும் போது இந்த தவறை செய்யாதீங்க.. துரதிஷ்டம் வரும்!
ஒற்றை கண் கொண்ட தேங்காய்
பொதுவாக நாம் பயன்படுத்தும் தேங்காயில் மூன்று கண்கள் தான் இருக்கும். ஆனால் ஒற்றை கண் தேங்காய் அபூர்வமானது. இது கிடைப்பது அரிது. வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் இந்த ஒற்றை கண் தேங்காய் வைத்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.மேலும் இந்த தேங்காய் இருக்கும் வீடு எப்போதும் மங்களகரமானதாகவே இருக்கும்.
இதையும் படிங்க: வாஸ்துபடி, உங்கள் கிச்சனில் இந்த பொருள்கள் இப்படி வையுங்கள்.. இனி பண கஷ்டம் வரவே வராது..!!