பெரியவர்களை போல 'குழந்தைகள்' தலையணை வைத்து தூங்கலாமா? முக்கிய தகவல்
Parenting Tips : குழந்தை தூங்கும் போது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானதா? இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இங்கு காணலாம்.

பெரியவர்களை போல 'குழந்தைகள்' தலையணை வைத்து தூங்கலாமா? முக்கிய தகவல்
பொதுவாக நாம் தூங்கும் போது தலையணை பயன்படுத்துவது மிகவும் பொதுவானது. இது கழுத்து மற்றும் தலைக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், சிறந்த தூக்கத்திற்கும் உதவுகின்றது. குழந்தைகளுக்கு இது நல்லதா? குழந்தைகள் தூங்கும் போது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இல்லையெனில், இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
நிபுணர்கள் செல்வது என்ன?
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது ரொம்பவே முக்கியம். குறிப்பாக ஒன்று முதல் இரண்டு வயது உள்ளவரை குழந்தையின் ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோர்கள் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு தலையணை கொடுப்பது நல்லதல்ல. சில சமயங்களில் அது அவர்களது உயிருக்கு ஆபத்து கூட ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவம் கொடுத்தால் முழுச்சத்து கிடைக்கும் தெரியுமா?
எந்த வயதில் கொடுக்கலாம்?
உண்மையில், குழந்தைக்கு இரண்டு வயது முடியும் வரை தலையணை பயன்படுத்த தேவையில்லை இன்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபோல குழந்தை தூங்கும் இடத்தில் வேறு எந்த பொம்மைகளையும் வைக்கக் கூடாது. குழந்தையை எப்போதும் ஒரு தட்டையான மெத்தையில் மட்டுமே தூங்க வைக்கவும். முக்கியமாக ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தையை நீங்கள் போர்வையால் கூட மூடலாம்.
இதையும் படிங்க: குழந்தை பிறந்து 6 மாதம் வரை 'தண்ணீர்' கொடுக்காதீங்க.. பலர் தெரியாமல் செய்யும் தவறு!!
ஆபத்துகள் என்ன?
- இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தலையணை பயன்படுத்தினால் மூச்சுத்திணறல் ஏற்படும் சில சமயங்களில் இறப்பு கூட நிகழும்.
- தலையணையில் இருக்கும் பஞ்சு மற்றும் பீட்ஸ் போன்றவை குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
- பெரும்பாலான தலையணைகள் பாலிஸ்டர் அல்லது பேப்ரிக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இது குழந்தைகளுக்கு சூட்டை ஏற்படுத்தும். இதன் காரணமாக பல உடல் நல கோளாறுகள் ஏற்படும். அதிக சூட்டின் காரணமாக அதிகமாக வியக்க தொடங்கும் இது குழந்தைகளுக்கு நல்லதல்ல.
- சில பெற்றோர்கள் சாப்டான தலையணையை குழந்தைக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் குழந்தை நீண்ட நேரம் தூங்கும் போது உயரமான தலையணையால் குழந்தையின் கழுத்து எலும்பு மோசமாக பாதிக்கப்படும். எனவே இதற்கு தலையணை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
குறிப்பு : குழந்தையை தலையணை இல்லாமல் தூங்க வைக்கவும். மேலும் அவ்வப்போது குழந்தையின் தூக்க நிலையில் மாற்றவும்.