குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவம் கொடுத்தால் முழுச்சத்து கிடைக்கும் தெரியுமா?

Parenting Tips : குழந்தைகளுக்கு அசைவம் எந்த வயதிலிருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம் என்பதை பற்றி இங்கு காணலாம்.

when to start feeding non veg to your kids in tamil mks

குழந்தைகளின் ஆரோக்கியத்தை குறித்து பெற்றோர்கள் எப்போதுமே அக்கறையாக இருப்பார்கள். மேலும் அவர்கள் ஆரோக்கியத்திற்கு சரியான முடிவையும் எடுக்க விரும்புவார்கள். அந்த வகையில் குழந்தைக்கு ஆறு ஆறு மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலைத் தவிர, சில உணவுகளையும் கொடுக்க தொடங்குவார்கள். இந்த சமயத்தில் குழந்தையின் உணவு பழங்கள் மற்றும் காய்கறிகள் தான் முதலில் இருக்கும். ஆனால் பல தாய்மார்களின் மனதில் இருக்கும் ஒரு கேள்வி எதுவென்றால் குழந்தைக்கு எப்போது அசைவ உணவு கொடுக்க வேண்டும் எப்படி? அதைத் தொடங்க வேண்டும் எப்படி என்றுதான். ஆனால் சில வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் மட்டுமே போதும். குழந்தைகளுக்கு அசைவு உணவு சாப்பிட்டால் கூட எந்த பிரச்சனையும் ஏற்படாது. இப்போது குழந்தைக்கு எந்த வயதில் இருந்து அசைவம் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.

குழந்தைக்கு எந்த வயதில் இருந்து அசைவம் கொடுக்கலாம்?

6 முதல் 8 மாத குழந்தைக்கு அசைவம் கொடுக்க ஆரம்பிக்கலாம். அசைவத்தில் ஏராளமான புரத நிறைந்துள்ளதால் இது குழந்தையின் வளர்ச்சிக்கு ரொம்பவே நல்லது. குழந்தைக்கு அசைவம் கொடுக்க விரும்பினால் முதலில் முட்டையிலிருந்து ஆரம்பிக்கவும். ஒரு வயதுக்கு பிறகு தான் குழந்தைக்கு கோழி கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு முட்டை கொடுத்து இரண்டு மாதம் கழித்து மீன் உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கலாம் அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக தான். ஒரு வயதிற்கு பிறகு குழந்தைக்கு கோழியை சூப்பாக முதலில் கொடுப்பதுதான் நல்லது. ஏனெனில் சில சமயங்களில் நீங்கள் சரியாக கொடுக்கும் போது அதனால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமாக இரண்டு வயதுக்கு பிறகு தான் குழந்தைக்கு ஆட்டிறைச்சி கொடுக்க வேண்டும். ஏனெனில் ஆட்டு இறைச்சி ஜீரணிக்க அதிகநேரம் எடுக்கும்.

இதையும் படிங்க:  பிறந்த குழந்தைகளை வைத்து போட்டோஷூட் செய்றது ஆபத்து..  குழந்தையோட ஆரோக்கியத்தையே பாதிக்கலாம்!! 

குழந்தைகளுக்கு இறைச்சி கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் :

6 முதல் 12 மாத குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் துத்தநாகம் மிகவும் அவசியம். இவை தாய்ப்பாலில் போதுமான அளவு இல்லாததால் வளரும் குழந்தைகளுக்கு இரும்பு சத்து நிறைந்த பிற உணவுகளை கொடுக்க வேண்டும். அந்த வகையில், இறைச்சியில் இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது தவிர இதில் மக்னீசியமும் அதிகமாகவே உள்ளது. சொல்லப்போனால் பழங்கள் மற்றும் தானியங்களை விட இருட்சியில்தான் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதாவது குழந்தைக்கு சிறிதளவு இறைச்சி கொடுத்தால் கூட அவர்களுக்கு போதிய அளவு ஊட்டச்சத்து அதன் மூலம் கிடைக்கும். அதே சமயம், குழந்தைக்கு அசைவம் கொடுக்கும் போது அவர்களின் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும்.

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கு நிறைய பவுடர் போடும் தாயா நீங்க? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!!

இறைச்சி இரும்பு உறிஞ்சுதலுக்கு உதவும்:

  • இறைச்சி இரும்புக்கான நல்ல ஆதாரம் மட்டுமின்றி பிற உணவுகளில் இருந்து இரும்பை உறிஞ்சும் தெரியுமா? அதுபோல இறைச்சியை சிறிதளவு காய்கறியுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் கூட இரும்புச்சத்து அதிகரிக்கும். இதனால் குழந்தைக்கு இரத்த சோகை பிரச்சனை வராது. 
  • கோழி, முட்டை, மீன் போன்றவற்றில் புரதங்கள் அதிகளவு உள்ளது. இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. அதுபோல இவற்றில் இருக்கும் வைட்டமின் டி உடலில் நரம்பு செல்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. 

முக்கிய குறிப்பு : குழந்தைக்கு அசைவத்தை முதலில் சூப்பாக தான் செய்து கொடுக்க வேண்டும். வேகவைத்த இறைச்சியை ஒருபோதும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். அதுபோல குழந்தைகளுக்கு எலும்பில்லாத இறைச்சியை தான் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் இறைச்சி எப்போதும் புதிதாக தான் இருக்க வேண்டும். இல்லையெனில் குழந்தைக்கு வயிற்று தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும் முக்கியமாக இறைச்சி சமைப்பதற்கு முன் நன்கு கழுவி சமைக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios