இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அரசியல், ஜனநாயகன் வழக்கு தீர்ப்பு, தங்கம் வெள்ளி புதிய உச்சம், சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

09:41 AM (IST) Jan 27
ஜனவரி 27, 2026 அன்று, 5 நாள் வேலைவாரம் கோரி United Forum of Bank Unions (UFBU) அகில இந்திய வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. வங்கிகளில் சேவைகள் பாதிக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.
09:37 AM (IST) Jan 27
Today Gold Rate: சர்வதேச காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
09:21 AM (IST) Jan 27
Pandian Stores S2 E700 Today: பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கோமதிதான் கதிர்-ராஜி திருமணத்தை நடத்தி வைத்த ரகசியத்தை உடைக்கிறார். குடும்ப மானத்தைக் காக்க எடுத்த இந்த முடிவு, பாண்டியன் மற்றும் முத்துவேல் குடும்பங்களிடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
08:56 AM (IST) Jan 27
இந்தியாவில் பெட்ரோல் ஸ்கூட்டர்களின் ஆதிக்கம் குறைந்து, குடும்பங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நோக்கி நகர்கின்றன. டிவிஎஸ் ஐகியூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று குடும்பங்களின் நம்பிக்கையான ஸ்கூட்டராக மாறியுள்ளது.
08:35 AM (IST) Jan 27
அய்யனார் துணை சீரியலில் நிலாவின் லேப்டாப் தொலைந்துபோன நிலையில் அதை கண்டுபிடித்துக் கொடுக்க சோழனின் உதவியை நாடி இருக்கிறார் நிலா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
08:02 AM (IST) Jan 27
மதுரை ரவுடி வெள்ளைகாளி மீது நடந்த தாக்குதல் வழக்கில், கைது செய்யப்பட்ட அழகுராஜா என்பவர் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆயுதங்களை மீட்க அழைத்துச் சென்றபோது, போலீசாரை தாக்கி தப்ப முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
07:07 AM (IST) Jan 27
தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. கோவை, ஈரோடு, கரூர், சேலம், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மின் தடை ஏற்படும்.