Tamilnadu Rain: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும், பலத்த காற்று காரணமாக மீனவர்கள் தென்தமிழக கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் பனி பொழிவு குறைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் பனி அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதாவது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்கு மாவட்டங்களிலும் (கோயம்புத்தூர் & நீலகிரி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஒரிரு இடங்களில் லேசான மழை (drizzle) பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் 28 முதல் பிப்ரவரி 02ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை

இன்று முதல் 31ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. இயல்பை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

வெப்ப அளவின் வேறுபாடு

இன்று முதல் 31ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று

அறிவுறுத்தப்பட்டுள்ளது.