- Home
- Politics
- ராமதாஸ் IN திருமா OUT..? திக்கு தெரியாமல் தவிக்கும் திமுக..? விசிக கோபத்துக்கு காரணம் என்ன..?
ராமதாஸ் IN திருமா OUT..? திக்கு தெரியாமல் தவிக்கும் திமுக..? விசிக கோபத்துக்கு காரணம் என்ன..?
திமுக எந்த முடிவை எடுக்கப் போகிறது? விசிகவை தக்க வைத்துக் கொள்வதா? அல்லது ராமதாஸ் தலைமையிலான பாமகவை அணுகுவதா என்பதை 2026 தேர்தல் அரசியல் கணக்கில் முக்கிய திருப்பமாக மாறக்கூடும்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய குழப்பம் ஒன்று உருவாகி இருகிறது. குறிப்பாக ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி, திமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு குறித்த பேச்சுகள் தீவிரமாகி வரக்கூடிய நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எடுத்திருக்கும் கடுமையான நிலைப்பாடு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
‘‘பாமக இடம்பெறும் எந்த கூட்டணிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது. இது இன்றைய முடிவு அல்ல. 14 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட தீர்மானம்’’ என்று திருமாவளவன் தெளிவாக கூறியிருக்கிறார். இதுதான் திமுகவுக்கு சிக்கலாகிறது. அப்படி என்னதான் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது? ஏன் இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை விசிக இன்னும் மாற்றாமல் வைத்திருக்கிறது என்பதே இப்போது எழக்கூடிய முக்கியமான கேள்வி. தமிழக அரசியலில் பாமக ஒரு முக்கியமான ஜாதி அடிப்படையில் அரசியல் கட்சியாக இருந்து வருகிறது. அந்த கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணி மற்றும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணிகள் என இரண்டாகப் பிரிந்து, பிளவுபட்டு செயல்பட்டு வருகிறது.
இதில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக ஏற்கனவே அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து விட்டது. ஆனால், ராமதாஸ் தலைமையிலான பாமக எந்த கூட்டணிக்கு சொல்ல போகிறது என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வரலாம் என்று அரசியல் கணக்கு பல மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. ராமதாஸ் திமுவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற தகவல்களும் அவ்வபோது வெளியாகி வருகிறது. இருப்பினும் திமுக கூட்டணியில் பாமக இணைவதில் முக்கியமான தடையாக இருப்பது விசிக. ஏற்கனவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு முக்கிய அங்கம் வகித்து வருகிறது. திமுக -விசிக்கு உறவு என்பது தேர்தல் கணக்கு தாண்டி கருத்துகள் அடிப்படையில் வலுவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
எனவே விசிகாவா? அல்லது பாமகவா? என்ற தேர்வு வந்தால் திமுகவின் முன்னுரிமை விசிக என்பது அரசியல் வட்டாரங்களில் பரவலாக நிலவுக்க்கூடிய கருத்து. அதனால்தான் இதுவரை ராமதாஸ் தலைமையிலான பாமகவை திமுக வெளிப்படையாக கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த விரிசலுக்கான வேர்கள் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில் போட்டியிட்டனர். ஆனால், அந்த கூட்டணி வெற்றி பெற்றது. அந்த தேர்தலுக்கு பிறகு பாமக விசிகவை இணைப்பது திமுகவுக்கு எந்த அரசியல் பலனைகள் தரவில்லை என்ற கருத்து திமுக தரப்பில் மட்டுமல்ல அரசியல் வட்டாரங்களிலேயே பரவலாக பேசப்பட்டது. பாமக மற்றும் விசிக இடையே கருத்து மோதல்களும் தீவிரமடைந்தே வருகிறது.
2012 ஆம் ஆண்டு தர்மபுரி கலவரம், 2013 ஆம் ஆண்டு மரக்காணம் கலவரம் போன்ற சம்பவங்கள் இரு கட்சிகளுக்கு இடையேயான உறவை முற்றிலுமாக பதற்றமடைய வைத்தது. வன்னியர் சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் கட்சியாக பாமகவும், தலித் மக்களின் அரசியல் குரலாக விசிகவும் நேரடியாக மோதும் நிலை உருவானது. இதற்கு முன்பு வரை ராமதாஸும், திருமாவளவனும் தமிழ் மொழி, ஈழப் பிரச்சனை, சமூக நீதி போன்ற பல விஷயங்களில் ஒரேமேடையில குரல் கொடுத்தவர்களதான். ஆனால் 2011க்கு பிறகு அவர்கள் அரசியல் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக மாறிவிட்டனர். அதன் பிறகு நடந்த எந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில் இடம் பெறவில்லை. இந்த பின்னணியில்தான் பாமக இருக்கக்கூடிய கூட்டணியில் விசிக இருக்காது என்று திருமாவளவனின் உறுதியான நிலைப்பாடு உருவானது.
கடந்த ஆண்டு பாமகவில் உட்புறவு ஏற்பட்டபோது ராமதாசுக்கு ஆதரவாக திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தாலும் கூட அது கூட்டணி அரசியலுக்கு பொருந்தாது என்பதனையும் திருமா இப்பொழுது தெளிவுபடுத்தி இருக்கிறார். அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக கூட்டணிக்கு சென்றுவிட்ட நிலையில், ராமதாஸ் தரப்பு பாமகவை திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறினாலும், அவருடைய நிலைப்பாடு திமுகவுக்கு கடும் அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் திமுக எந்த முடிவை எடுக்கப் போகிறது? விசிகவை தக்க வைத்துக் கொள்வதா? அல்லது ராமதாஸ் தலைமையிலான பாமகவை அணுகுவதா என்பதை 2026 தேர்தல் அரசியல் கணக்கில் முக்கிய திருப்பமாக மாறக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் உற்று நோக்கி வருகின்றன.
