- Home
- Astrology
- Jan 28 Mesha Rasi Palan: மேஷ ராசிக்கு, இன்று வாயில் கண்டம்.! எந்த சூழ்நிலையிலும் வாயை மட்டும் திறந்துடாதீங்க.!
Jan 28 Mesha Rasi Palan: மேஷ ராசிக்கு, இன்று வாயில் கண்டம்.! எந்த சூழ்நிலையிலும் வாயை மட்டும் திறந்துடாதீங்க.!
January 28, 2026 Mesha Rasi Palangal: ஜனவரி 28, 2026 மேஷ ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:
இன்றைய தினம் முக்கிய விஷயங்களில் முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் உள்ளுணர்வு மகிழ்ச்சியற்றதாகவும், பாதுகாப்பற்றதாகவும் உணரலாம். எனவே இன்றைய தினம் அமைதியாக இருப்பது நல்லது. காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்.
நிதி நிலைமை:
பயனுள்ள வகையில் பணத்தை உங்களால் செலவழிக்க இயலாது. நிறைய பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். எனவே ஆடம்பர செலவுகளில் பணத்தை செலவிடாமல் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பணத்தை சேமிப்பது நல்லது.
தனிப்பட்ட வாழ்க்கை:
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். தேவையற்ற வாக்குவாதங்கள் எழலாம். எனவே அதிகமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சிறு தவறுகள் செய்ய நேரிடலாம். எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
பரிகாரம்:
இன்று முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. கந்த சஷ்டி கவசம் வாசிப்பது அல்லது கேட்பது மன தைரியத்தைத் தரும். இயலாதவர்களுக்கு பழங்கள் அல்லது உணவுகளை வழங்குவது கிரக தோஷங்களை குறைக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

