இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், வானிலை நிலவரம், தங்கம் விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:08 AM (IST) Dec 20
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.99,200 ஆகவும், வெள்ளி கிலோவுக்கு ரூ.2,26,000 ஆகவும் விற்பனையாகிறது. சர்வதேச காரணங்களால் இந்த விலை உயர்வு தொடரலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
09:52 AM (IST) Dec 20
சினிமா ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஒரு மாபெரும் கலைஞர் ஸ்ரீனிவாசன். இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 48 ஆண்டு கால சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
09:48 AM (IST) Dec 20
விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே, அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சங்கராபரணி ஆற்றுப் பாலத்தின் தடுப்பை உடைத்து தொங்கியது. இந்த கோர விபத்தில் 40 பயணிகள் பயணித்த நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
09:38 AM (IST) Dec 20
மத்திய அரசின் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மூலம் ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம். இத்திட்டத்தில் தொழிலின் தன்மை மற்றும் பயனாளியின் பிரிவைப் பொறுத்து 15% முதல் 35% வரை அரசு மானியமும் வழங்கப்படுகிறது.
09:23 AM (IST) Dec 20
நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படம் ஜனவரி 9-ந் தேதியும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஜனவரி 14-ந் தேதியும் ரிலீஸ் ஆக இருந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி மாற்றப்பட இருக்கிறதாம்.
08:50 AM (IST) Dec 20
நெய்வேலி NLC இந்தியா லிமிடெட், 575 பட்டதாரி மற்றும் டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒரு வருட பயிற்சி காலத்திற்கு, பட்டதாரி அப்ரெண்டிஸ்களுக்கு ரூ.15,028 ஊதியம் வழங்கப்படும்.
08:44 AM (IST) Dec 20
Viluppuram Power Cut: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
08:44 AM (IST) Dec 20
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தன் மீது கல்யாணியின் ஆவி வந்திருப்பதாக பொய் சொல்லி மனோஜை ஏமாற்றி வரும் விஷயத்தை மீனா கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
08:01 AM (IST) Dec 20
தமிழில் ரன், சண்டைக்கோழி, பையா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் லிங்குசாமியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தி பரவிய நிலையில், அதுபற்றி அவரே விளக்கம் அளித்துள்ளார்.
08:01 AM (IST) Dec 20
தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் திருவண்ணாமலையில் மாபெரும் வேளாண் கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சி புதிய தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள், மற்றும் நிபுணர் ஆலோசனைகளை ஒரே இடத்தில் வழங்கும்.
07:24 AM (IST) Dec 20
School Leave: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.