MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • வேற லெவல் ரீச்.. புதினுக்கு கொடுத்த அந்த கிப்ட்! எக்ஸ் தளத்தையே அதிர வைத்த பிரதமர் மோடி!

வேற லெவல் ரீச்.. புதினுக்கு கொடுத்த அந்த கிப்ட்! எக்ஸ் தளத்தையே அதிர வைத்த பிரதமர் மோடி!

PM Modi எக்ஸ் தளத்தின் புதிய தரவரிசையில் பிரதமர் மோடி ஆதிக்கம்! அதிகம் லைக் செய்யப்பட்ட டாப் 10 பதிவுகளில் 8 மோடியுடையது. எந்தப் பதிவு முதலிடம்? விவரம் உள்ளே.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Dec 20 2025, 11:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
PM Modi
Image Credit : Gemini

PM Modi

சமூக வலைத்தளங்களில் ஒன்றான 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்), சமீபத்தில் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நாட்டில், ஒரு மாதத்தில் அதிகம் 'லைக்' (Like) செய்யப்பட்ட பதிவுகள் எவை என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியானதுமே, பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் செல்வாக்கு எந்த அளவுக்கு வலிமையாக உள்ளது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
எக்ஸ் தளத்தில் மோடியின் அசைக்க முடியாத ஆதிக்கம்
Image Credit : X

எக்ஸ் தளத்தில் மோடியின் அசைக்க முடியாத ஆதிக்கம்

உலகளவில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட அரசியல் தலைவர்களுள் ஒருவரான பிரதமர் மோடி, இந்திய அளவில் அதிக ஈடுபாட்டைப் (Engagement) பெற்ற தலைவராகத் திகழ்கிறார். கடந்த 30 நாட்களுக்கான எக்ஸ் தளத்தின் தரவுகளைப் பார்க்கும்போது, இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட முதல் 10 பதிவுகளில் (Top 10 Most-liked Tweets), 8 பதிவுகள் பிரதமர் மோடியுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் வேறு எந்த இந்திய அரசியல் தலைவரும் இடம்பெறவில்லை என்பது மோடியின் தனித்துவமான சமூக வலைத்தள ஆளுமையைக் காட்டுகிறது.

36
முதலிடம் பிடித்த 'பகவத் கீதை' பரிசு
Image Credit : x.com/narendramodi

முதலிடம் பிடித்த 'பகவத் கீதை' பரிசு

கடந்த மாதத்தில் இந்திய அளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட பதிவாக, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பகவத் கீதையின் ரஷ்ய மொழிபெயர்ப்பை பரிசாக வழங்கிய புகைப்படம் இடம்பிடித்துள்ளது. இந்தப் பதிவு மட்டும் சுமார் 2.3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், 6.7 மில்லியன் மக்களைச் சென்றடைந்தது மட்டுமின்றி, சுமார் 29,000 பயனர்களால் பகிரவும் (Reshare) செய்யப்பட்டுள்ளது.

46
எக்ஸ் தளத்தின் புதிய வசதி மற்றும் எதிர்பார்ப்புகள்
Image Credit : x.com/narendramodi

எக்ஸ் தளத்தின் புதிய வசதி மற்றும் எதிர்பார்ப்புகள்

எக்ஸ் தளம் அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் புதிய வசதி, பயனர்களுக்குத் தங்கள் பிராந்தியத்தில் எந்த வகையான உள்ளடக்கம் அதிகம் ரசிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. பொதுவாக எக்ஸ் தளம் ஒவ்வொரு ஆண்டும் விராட் கோலி, பிரதமர் மோடி மற்றும் முக்கிய நிகழ்வுகளை மையமாக வைத்து "Year in Review" பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வமான 'அதிகம் லைக் செய்யப்பட்ட பதிவுகள்' பட்டியல் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

56
செயல்படாத கணக்குகளுக்கு வந்த புதிய மாற்றம்
Image Credit : X

செயல்படாத கணக்குகளுக்கு வந்த புதிய மாற்றம்

பயனர் ஈடுபாட்டைத் தாண்டி, 'எக்ஸ்' தளம் நீண்ட நாட்களாகச் செயல்படாமல் இருக்கும் கணக்குகளின் பெயர்களை (Usernames) மற்றவர்களுக்கு வழங்கும் புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 'எக்ஸ் ஹேண்டில் மார்க்கெட் பிளேஸ்' (X Handle Marketplace) மூலம், நீண்ட காலமாக முடங்கிக் கிடக்கும் பயனர் பெயர்கள் மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படுகின்றன.

66
யாருக்கு இந்த வசதி கிடைக்கும்?
Image Credit : ANI

யாருக்கு இந்த வசதி கிடைக்கும்?

இந்த வசதியானது தற்போது பிரீமியம்+ (Premium+) மற்றும் பிரீமியம் பிசினஸ் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. தகுதிவாய்ந்த பயனர்கள், தங்களின் பிராண்ட் அல்லது தனிப்பட்ட அடையாளத்தை மேம்படுத்த, செயல்படாத கணக்குகளின் பெயர்களைத் தேடிக் கோரலாம். எக்ஸ் தளத்தைப் பொறுத்தவரை, 30 நாட்கள் லாக்-இன் செய்யாத கணக்குகள் 'செயல்படாதவை' (Inactive) எனக் குறிக்கப்படும். 6 மாதங்களுக்குப் பிறகு அவை நீக்கப்படலாம். இருப்பினும், ஸ்பேம் மற்றும் அடையாளத் திருட்டைத் தடுக்க, இந்தப் பெயர்கள் பொதுவெளியில் நேரடியாக விடப்படாமல் பாதுகாக்கப்பட்டே வருகின்றன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
AI Battleground: AI உலகில் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து ‘திறமை’ மட்டுமே! AI உலகில் இந்தியா செய்ய வேண்டியது என்ன?
Recommended image2
Fingerprint Sensor : ஒருவர் இறந்ததும் போனின் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஏன் வேலை செய்யாது? டேட்டாவை எப்படி எடுப்பது?
Recommended image3
Beaver Supermoon 2026: வழக்கத்தை விட 30% அதிக பிரகாசத்துடன் ஜொலித்த பீவர் சூப்பர்மூன்; அடுத்த சூப்பர்மூன் எப்போது தோன்றும்?
Related Stories
Recommended image1
மாதம் ரூ.35,000 வருமானம் தரும் எக்ஸ்! கேம்பஸ் இன்டர்வியூ எல்லாம் வேஸ்டு...
Recommended image2
வாட்ஸ்அப் முடங்கியது: 50 கோடி பயனர்கள் திணறல்! எக்ஸ் தளத்தில் குவியும் புகார்களும், மீம்ஸ்களும்.. என்ன நடந்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved