அண்ணா வழியில் பயணிக்கும் எங்களை தனி தமிழ்நாடு கோரிக்கை எழுப்பி பெரியார் வழியில் செல்ல வைத்துவிடாதீர்கள். எனவே மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் என ஆ.ராசா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு , திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடினார் என்று பேசினார்.

08:30 PM (IST) Jul 03
05:42 PM (IST) Jul 03
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனின் முகத்தில் முக பருவை நீக்குவதாக ஆசிரியர் ஊசியால் குத்தியதில் மாணவன் முகம் வீங்கி, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க
04:40 PM (IST) Jul 03
தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
02:26 PM (IST) Jul 03
அதிமுக பொதுக்குழு கூடுவதில் எந்தவித சட்ட சிக்கலும் இல்லை, ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என வானகரத்தில் பொதுக்குழு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த பின்னர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
12:51 PM (IST) Jul 03
தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டுவதாக இருந்தாலும் பொருளாளரான ஓபிஎஸ் ஒப்புதலின்றி கூட்டினால் அது செல்லாது என தெரிவித்தார். இதன் காரணமாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளும் எங்களுக்கு சாதகமாகவே வரும் என திட்டவட்டமாக கூறினார். எனவே, அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை வைத்தியலிங்கம் உறுதிபட தெரிவித்தார்.
12:16 PM (IST) Jul 03
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் விற்கப்படும் கூட்டுறவு சங்கங்களின் தரமான தயாரிப்புகளை வெளிச் சந்தைகளைவிட, குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும். தரமான பொருட்களை, குறைந்த விலையில் விற்பனை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் படிக்க
11:51 AM (IST) Jul 03
சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 10 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு இன்னும் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11:38 AM (IST) Jul 03
கூட்டுறவு வங்கிகளிலும் இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியில் வங்கி சேவை என பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகையை கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்க, மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க
11:24 AM (IST) Jul 03
நடிகை நயன்தாராவை இறுக்கமாக கட்டிப் பிடித்தவாரு இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோ பார்த்த ரசிகர்கள் பலர், இருவரும் கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வந்தாலும், சிலரோ சிங்கிள் பசங்கள சோதிக்காதீங்க என கமெண்ட் போட்டு புலம்பி வருகின்றனர்.மேலும் படிக்க
10:48 AM (IST) Jul 03
கோவையில் மேம்பால பணிக்காக குழி தோண்டிய போது பழங்காலத்து ராணிகள் அணியும் தங்கச் சங்கிலி கிடைத்தாக கூறி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ5 லட்சம் ஏமாற்றி வட மாநில கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்
10:04 AM (IST) Jul 03
நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் ஆகாததற்கான காரணம் குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 40 வயதைக் கடந்தபோதிலும் நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு அவரது உடல் எடை அதிகமானதுதான் காரணம் என அவர் கூறி உள்ளார். மேலும் படிக்க
09:47 AM (IST) Jul 03
குடியரசுத்தலைவர் தேர்தலைத் தொடர்ந்து, துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அம்ரிந்தர் சிங் இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பாஜகவும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
தொடர்ந்து படிக்க...
09:46 AM (IST) Jul 03
தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஜூலை மாதம் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
09:21 AM (IST) Jul 03
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவை நடத்தும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.பெரும்பாலும் நேரடியாக பொதுக்குழுவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடயே தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஆகவே கொரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு பொதுக்குழு நடத்த அனுமதி மறுக்கும்பட்சத்தில் ஆன்லைனில் அதிமுக பொதுக்குழுவை நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு தயாராக இருக்கும் படி பொதுக்குழு உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
09:05 AM (IST) Jul 03
காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தா, திருமண வாழ்க்கை சந்தோஷமில்லாமல் அமைவதற்கு நீங்கள் தான் காரணம் என அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், பிரபல பாலிவுட் இயக்குனருமான கரண் ஜோகரை பார்த்து கூறுகிறார். ஏனென்றால் நீங்கள் தான் K3G படத்தில் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என காட்டியுள்ளீர்கள். ஆனால் உண்மையில் அது கே.ஜி.எஃப் படம் போன்று பல பிரச்சனைகள் நிறைந்தது என தெரிவித்துள்ளார் சமந்தா. மேலும் படிக்க
08:48 AM (IST) Jul 03
நபிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் ஷர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸை வெளியிட்டுள்ளது. நுபுர் ஷர்மா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆம்ஹெர்ஸ்ட் ஸ்ட்ரீட் மற்றும் நர்கெல்டங்கா காவல் நிலையங்கள் தனித்தனியாக அவருக்கு சம்மன் அனுப்பியதாகவும் இரண்டு காவல் நிலையங்களும் தலா இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸை வெளியிட்டுள்ளது.
08:36 AM (IST) Jul 03
தன்னை சின்னவர் என நான் கூப்பிட சொன்னதாக தகவல் பரவி இருக்கிறது. இருக்கிற பிரச்சினையில் இந்த பிரச்சனை வேறையா என கூறினார். நான் அப்படி சொல்லவே இல்லையென்றும், பல்வேறு கூட்டங்களுக்கு செல்லும் போது என்னை மூன்றாம் கலைஞர், இளம் கலைஞர் என்றெல்லாம் என்னை அழைக்கின்றனர். என் மீது உள்ள அன்பு காரணமாக அப்படி அழைக்கின்றனர் ஆனால் என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு கலைஞரை சிறுமைப்படுத்துவதாக உள்ளதாக கூறினார்
மேலும் படிக்க
சின்னவர் என அழைக்க சொன்னேனா? இது என்ன புது பிரச்சனையா இருக்கு..ஷாக் ஆன உதயநிதி
07:57 AM (IST) Jul 03
07:50 AM (IST) Jul 03
சீரியல் நடிகை ரச்சிதாவை பெரும்பாலும் புடவை அணிந்தபடியே பார்த்த ரசிகர்கள், அவரின் கவர்ச்சி அவதாரத்தை பார்த்து வாயடைத்துப் போயினர். அவர் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவே இவ்வாறு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி வருவதாக கூறப்பட்டது. அதன்படியே நடிகை ரச்சிதாவுக்கு தற்போது பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் தற்போது வெப் தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். மேலும் படிக்க
07:46 AM (IST) Jul 03
கட்சியின் பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் தலைமைக் கழக கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுத்தோம். அப்படி இருந்தும் ஓபிஎஸ் வரவில்லை. ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவுக்கு அவருக்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.