Published : Nov 30, 2023, 07:15 AM ISTUpdated : Nov 30, 2023, 08:40 PM IST

Tamil News Live Updates: அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சுருக்கம்

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

 Tamil News Live Updates:  அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

08:40 PM (IST) Nov 30

உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 37 லட்சம் குடும்பங்கள் பலன்: மத்திய அமைச்சர் தகவல்!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 37 லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்

 

07:51 PM (IST) Nov 30

Exit poll results 2023: எந்த மாநிலத்தில் யார்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முழு விவரம்!

தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த முழு விவரத்தை இந்த தொகுப்புக் காணலாம்

07:50 PM (IST) Nov 30

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்துள்ளது இந்திய பொருளாதாரத்தின் வலிமையை காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

 

05:29 PM (IST) Nov 30

தெலங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவு: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாற்றியமைப்பு!

தெலங்கானாவில் இறுதிகட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
 

04:05 PM (IST) Nov 30

2030க்குள் தமிழகத்தில் எச்.ஐ.வி இல்லாத நிலை: முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

தமிழகத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்

 

03:50 PM (IST) Nov 30

திறனற்ற திமுக: களத்தில் இறங்க தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்!

சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு மழைநீர் வடிகால் திட்டம் இருப்பதாக ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்

 

03:31 PM (IST) Nov 30

கனமழை மீட்பு பணிகள்: அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்

 

03:08 PM (IST) Nov 30

பருத்திவீரன் டூ ஜப்பான்... 25 படங்களில் நடித்த நடிகர் கார்த்தி இத்தனை கோடி சொத்துகளுக்கு அதிபதியா?

பருத்திவீரன் படம் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

02:53 PM (IST) Nov 30

காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவை கொல்ல சதி? மத்திய அரசு விளக்கம்!

காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

 

02:20 PM (IST) Nov 30

முடங்கிக் கிடக்கும் டி.என்.பி.எஸ்.சி: தலைவரை நியமிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முழு அளவில் செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

 

02:19 PM (IST) Nov 30

முதல்வர் பினராயி விஜயன் பிரஷர் போடுறாரு: ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு!

கண்ணூர் பல்கலைக்கழக துணை வேந்தரை மீண்டும் நியமிக்க முதல்வர் பினராயி விஜயன் அழுத்தம் கொடுப்பதாக அம்மாநில ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்

 

01:33 PM (IST) Nov 30

இந்த சீனெல்லாம் இங்க செல்லாது; நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே சம்பளபாக்கிய கொடு- ஞானவேலை எச்சரித்த சமுத்திரகனி

பருத்திவீரன் பட பஞ்சாயத்து நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்லும் நிலையில், ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டதை விமர்சித்து சமுத்திரக்கனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

12:58 PM (IST) Nov 30

Chennai Heavy Rain: இரண்டு உயிர்களை காவு வாங்கிய சென்னை மழை..!

சென்னையில் பெய்த கனமழை காரணமாக இருவேறு இடத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

12:17 PM (IST) Nov 30

நயன்தாரா வாங்கி இருக்கும் 'Mercedes Maybach' காரில் இத்தனை வசதிகள் இருக்கா!

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் பரிசாக வழங்கி இருக்கும் மெர்சிடிஸ் மேபேக் காரின் சிறப்பம்சம் பற்றி பார்க்கலாம்.

12:03 PM (IST) Nov 30

அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

11:19 AM (IST) Nov 30

கனமழை எதிரொலி - சென்னையில் விமானங்கள் ரத்து

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஆந்திரா, அபுதாபி, இலங்கை செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

10:40 AM (IST) Nov 30

மக்களை தந்திரமாக ஏமாற்றும் திமுக.. மக்களவைத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.. இறங்கி அடிக்கும் வானதி சீனிவாசன்.!

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றி வரும் திமுகவுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என  வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

10:39 AM (IST) Nov 30

Today Gold Rate in Chennai : நேற்று 720 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:08 AM (IST) Nov 30

விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா? பிரேமலதாவை தொடர்ந்து அமைச்சர் சொன்ன ஹெல்த் அப்டேட்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் உடல்நிலை குறித்து முக்கிய தகவலை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

09:46 AM (IST) Nov 30

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு!

வடகிழக்கு பருவ மழையை ஒட்டி கடந்த சில வாரங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்ததால் சாலைகள், பாலங்கள், சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கின. இந்நிலையில், சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மீனப்பாக்கத்தில் 25.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல், திரு.வி.க.நகர் 14.9 செ.மீ., அம்பத்தூர் 14 செ.மீ., அண்ணாநகர் 13 செ.மீ., ஆலுந்தூர் 12 செ.மீ., மதுரவாயல் 11,9 செ.மீ., கோடம்பாக்கம் 11.5 செ.மீ., அடையார் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

09:42 AM (IST) Nov 30

ஒருவேள விவேகம் ரீமேக்கா இருக்குமோ! பிரபாஸின் சலார் பட கதையை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்

பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் சலார் படத்தின் கதை, விவேகம் படத்தின் கதை போல் இருப்பதாக கூறி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

09:15 AM (IST) Nov 30

Aavin Milk: பொதுமக்களின் அதித வரவேற்பை பெற்ற ஆவின் டிலைட்.. இனி 200 மி.லி. பாக்கெட்டிலும் கிடைக்கும்..!

ஆவின் டிலைட்  பால் 200 மில்லி பாக்கெட் நாளை முதல் அனைத்து சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும் என ஆவின் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

08:57 AM (IST) Nov 30

பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க காத்திருக்கும் பான் இந்தியா ஸ்டார்ஸ்.. டிசம்பர் மாதம் மட்டும் இத்தனை படங்கள் ரிலீசா?

நயன்தாரா நடித்த அன்னபூரணி முதல் பிரபாஸின் பிரம்மாண்ட படமான சலார் வரை டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் படங்கள் லிஸ்ட்டை பார்க்கலாம்.

08:41 AM (IST) Nov 30

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

08:22 AM (IST) Nov 30

Chembarambakkam:செம்பரம்பாக்கம் ஏரியில் 6000 கன அடி நீர் திறக்க முடிவு! 7 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து உபரி நீர் திறப்பு 6,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

07:18 AM (IST) Nov 30

ஒரு நாள் மழையில் திக்கு முக்காடி திணறிக்கொண்டிருக்கும் சென்னை! வயிறெரிந்து சாபம் விடும் மக்கள்! பாஜக விளாசல்!

சென்னையில் பெய்த கனமழையால் தெருக்களில் தண்ணீரை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது தெருக்களையே பார்க்க முடியவில்லை என நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார். 

07:18 AM (IST) Nov 30

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிட்லபாக்கம் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


More Trending News