Asianet News TamilAsianet News Tamil

Aavin Milk: பொதுமக்களின் அதித வரவேற்பை பெற்ற ஆவின் டிலைட்.. இனி 200 மி.லி. பாக்கெட்டிலும் கிடைக்கும்..!

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த 09.05.2023 அன்று சென்னையில் விட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட 500மில்லி ஆவின் டிலைட் பால் (ஊதா நிற பால் பாக்கெட்) (3.5%Far & 8.5% SNF) அறிமுகம் செய்யப்பட்டடு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

200ml Purple milk packets to be introduced from tomorrow tvk
Author
First Published Nov 30, 2023, 8:35 AM IST | Last Updated Nov 30, 2023, 8:37 AM IST

ஆவின் டிலைட்  பால் 200 மில்லி பாக்கெட் நாளை முதல் அனைத்து சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் விற்பனை நாளொன்றுக்கு சுமார் 14.50 இலட்சம் லிட்டரும் மற்றும் நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பால் உபபொருட்களை சுமார் 1000 க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக பொது மக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பொதுமக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜெந்தா நிறம்), சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) மற்றும் நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு நிறம்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த 09.05.2023 அன்று சென்னையில் விட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட 500மில்லி ஆவின் டிலைட் பால் (ஊதா நிற பால் பாக்கெட்) (3.5%Far & 8.5% SNF) அறிமுகம் செய்யப்பட்டடு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க;- இனி ஆவின் பச்சை பால் பாக்கெட் கிடையாது! ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துவது ஏன்? அமைச்சர் விளக்கம்!

 இதனைத்தொடர்ந்து தற்போது ஆவின் 500மில்லி டிலைட் பால் ரூ. 21/- விலையில் மாதாந்திர பாலட்டைகள் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் அனைத்து வட்டார அலுவலகங்கள், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும். மேலும் பொது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ. 10/- விலையில் 200 மில்லி ஆவின் டிலைட் பால் 01.12.2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios