பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிகவுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அழைப்பு விடுத்தார்.

04:16 PM (IST) Jul 26
தமிழ்நாடு முழுவதும் ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்
03:24 PM (IST) Jul 26
அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது
03:18 PM (IST) Jul 26
சிங்கப்பூரில் டெங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்
01:57 PM (IST) Jul 26
உத்தரபிரதேசத்தில் உள்ள யமுனை ஆற்றில் எரிவாயு குழாய் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
01:54 PM (IST) Jul 26
மேகாலயா முதல்வர் அலுவலகத் தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என அம்மாநில டிஜிபி பிஷ்னாய் தெரிவித்துள்ளார்
12:53 PM (IST) Jul 26
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிகவுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அழைப்பு விடுத்தார்.
12:46 PM (IST) Jul 26
அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது
12:44 PM (IST) Jul 26
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2,75,125 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
12:43 PM (IST) Jul 26
முதியோர் உதவித் தொகையை உயர்த்தும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை என ரவிக்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்
12:05 PM (IST) Jul 26
கோவையில் கள்ளக்காதலியின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காதலனையும், உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
12:04 PM (IST) Jul 26
காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11:53 AM (IST) Jul 26
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி-யின் ஆண்ட்ராய்ட் செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
11:13 AM (IST) Jul 26
ஜி20 மாநாட்டின் 4-வது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.
10:29 AM (IST) Jul 26
திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை திருச்சியில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கவுள்ளார்
09:24 AM (IST) Jul 26
சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
09:23 AM (IST) Jul 26
ரியல்மி 11 4ஜி ஸ்மார்ட்போன் ஜூலை 31 அன்று வெளியிடப்பட உள்ள நிலையில், இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
08:58 AM (IST) Jul 26
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மதியம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்கிறார். திமுக தொடர்பான சொத்துப்பட்டியல். டாஸ்மாக் குறித்த வெள்ளை அறிக்கையை ஆளுநரிடம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
08:47 AM (IST) Jul 26
இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
08:31 AM (IST) Jul 26
நெட் பிளாக்அவுட்களைத் தவிர்க்க, வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகியவற்றுக்கு டிராய் தேர்ந்தெடுக்கப்பட்ட தடையை விதிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
08:05 AM (IST) Jul 26
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, அம்பத்தூர், ஆவடி, அடையார், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
08:02 AM (IST) Jul 26
சிலிண்டர் விலையில் இருந்து வங்கி விடுமுறை நாட்கள் வரை ஆகஸ்ட் 1, 2023 முதல் மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
07:58 AM (IST) Jul 26
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
07:32 AM (IST) Jul 26
தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த சிவபத்மநாதனை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக புதிய மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
07:32 AM (IST) Jul 26
திருச்சியில் இன்று நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். திமுக பயிற்சி பாசறையில் 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
07:30 AM (IST) Jul 26
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்தத 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
07:30 AM (IST) Jul 26
சென்னையில் 431வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.