டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை செய்யப்பட்டு ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால், இந்த கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

10:06 PM (IST) Aug 22
சமீப காலமாக பிரபலங்கள் முதல் இளைஞர்கள், ஆன்மீக வாதிகள் என பலர்... கருங்காலி மாலை அணிவதை பார்க்க முடிகிறது. சரி இந்த மரத்தால் செய்யப்படும் மாலைக்கு உள்ள மகத்துவத்தை இந்த தொகுப்பின் மூலம் பார்க்கலாம். மேலும் படிக்க
08:13 PM (IST) Aug 22
செஸ் உலக கோப்பை 2023 இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் உலகப்புகழ் பெற்ற முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனும் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தாவும் மோதினர். இன்று நடந்த இப்போட்டியில் முதல் சுற்றில் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. இறுதிப்போட்டியான இரண்டாம் சுற்று நாளை நடைபெறுகிறது.
07:48 PM (IST) Aug 22
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளது
06:53 PM (IST) Aug 22
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றடைந்துள்ளார்.
06:52 PM (IST) Aug 22
ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
05:59 PM (IST) Aug 22
கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி படுத்தியுள்ளது
05:57 PM (IST) Aug 22
காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தினை முதல்வர் ஸ்டாலின் வருகிற 25ஆம் தேதி நாகப்பட்டினத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்
05:57 PM (IST) Aug 22
மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்
05:15 PM (IST) Aug 22
விஜய் டிவி பாணியில், தற்போது சன் டிவியும் சூப்பர் ஹிட் தொடர் ஒன்றின் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
05:14 PM (IST) Aug 22
'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது 12-ஆவது நாள் வசூல் குறித்த தகவல், வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
04:44 PM (IST) Aug 22
சட்டவிரோதமாக பேனர் வைத்ததாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து பெங்களூரு மாநகராட்சி அதிரடி உத்தரவிட்டுள்ளது
03:34 PM (IST) Aug 22
கூகுள் நிறுவனம் அபாயகரமான 22 ஆப்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் அதனை நீக்க வேண்டும் என்று கூகுள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
02:46 PM (IST) Aug 22
சமீப காலமாக கிரெடிட் கார்டு செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடன் வலையில் விழுவதைத் தவிர்க்க கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.
02:08 PM (IST) Aug 22
டெஸ்லா நிறுவனம் 20 லட்சத்தில் இருந்து ஆண்டுக்கு 5 லட்சம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
01:28 PM (IST) Aug 22
சென்னையில் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் கஞ்சா கும்பல் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
01:28 PM (IST) Aug 22
தினமும் குடித்து விட்டு வந்து ஓயாமல் தொல்லை கொடுத்த கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி மனைவி அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
01:24 PM (IST) Aug 22
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி தற்போது வெளியாகி உள்ளது. அகவிலைப்படி உயர்வு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
12:48 PM (IST) Aug 22
ஆரஞ்சு நிறத்தில் புதிய வந்தே பாரத் ரயில் எப்போது தொடங்கப்படும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
11:09 AM (IST) Aug 22
தபால் ஊழியர் குசுமாவை பில் கேட்ஸ் பாராட்டி உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
09:58 AM (IST) Aug 22
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
09:33 AM (IST) Aug 22
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை செய்யப்பட்டு ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால், இந்த கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
08:41 AM (IST) Aug 22
திருமணமான 21 வயது இளம்பெண், 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:13 AM (IST) Aug 22
நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார், அடியே படத்தின் புரமோஷனுக்காக சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் விற்பனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
07:41 AM (IST) Aug 22
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடிக்க உள்ள தளபதி 68 திரைப்படத்தின் ஹீரோயின் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
07:16 AM (IST) Aug 22
அதிமுக மாநாடு வெற்றி, வெற்றியே, இப்படி பேசி அதன் வெற்றியை மறைக்க முடியாது என சிங்கை ஜி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
07:16 AM (IST) Aug 22
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
07:15 AM (IST) Aug 22
சென்னையில் 458வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.