பாக்ஸ் ஆபிஸை மிரட்டும் 'ஜெயிலர்'..! 12 நாட்களில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது 12-ஆவது நாள் வசூல் குறித்த தகவல், வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்த திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. நாளுக்கு நாள் ஜெயிலர் படத்தின் வசூல் அதிகரித்து கொண்டே செல்வதால், இந்த படத்தை தயாரித்த சன் பிச்சர்ஸ் நிறுவனமும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளது.
கடந்த வாரம் 'ஜெயிலர்' படத்தின் வசூல் குறித்து, சன் பிச்சர்ஸ் நிறுவனம், ரூ.375 கோடி வசூலித்துள்ளதாக அதிரடியாக தெரிவித்தது. அதே போல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், ஜெயிலர் திரைப்படம் 10 நாளில் ரூ.500 கோடி வசூலித்து புது சாதனை ஒன்றை படைத்துள்ளதாக சில செய்திகள் சமூக வலைதளத்தில் வைரலானது.
இதன் மூலம் கடந்தாண்டு வெளியாகி ரூ.500 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை ஜெயிலர் முறியடித்து உள்ளது. அதே போல் 'விக்ரம்' படத்தின் வசூலையும் 10 நாட்களில் முறியடித்து கெத்து காட்டியது.
தலைவரின் 'ஜெயிலர்' திரைப்படம், வெளியாகி 2 வாரங்களை எட்ட உள்ள நிலையில், ரசிகர்கள் பலர் தொடர்ந்து இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே ஜெயிலர் படத்தின் வசூல் 600 கோடியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.
கதறி அழும் நந்தினி ! குணசேகரனுக்கு எதிராக திரும்பிய கதிர்.. செம்ம ட்விஸ்ட்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!
இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் 12-ஆவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதன்படி இப்படம் 540 கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.