நைட் ஆனாவே ஃபுல் மப்பில் வந்து ஓயாமல் டார்ச்சர்! வலி தாங்க முடியாத மனைவி!ஆத்திரத்தில் என்ன செய்தார் தெரியுமா?
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராயவேலூரை சேர்ந்தவர் சண்முகவேல் (37). இவரது மனைவி அழகுசின்னு (31). இருவரும் கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
தினமும் குடித்து விட்டு வந்து ஓயாமல் தொல்லை கொடுத்த கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி மனைவி அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராயவேலூரை சேர்ந்தவர் சண்முகவேல் (37). இவரது மனைவி அழகுசின்னு (31). இருவரும் கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான சண்முகவேல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நாளுக்கு நாள் இவரது தொல்லை தாங்க முடியாத மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையும் படிங்க;- பெத்த இதே கையால.. ரத்தத்தோட ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போனேன்.. யாரும் உதவ முன் வரவில்லை.. தாய் கதறல்..!
பின்னர், சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். சில நாட்கள் அமைதியாக இருந்த சண்முகவேல் மீண்டும் குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வந்த சண்முகவேல், மனைவியிடம் மீண்டும் தகராறு செய்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து சண்முகவேல் முகத்தில் தூவி அரிவாளை எடுத்து கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதையும் படிங்க;- கணவரை கழட்டி விட்டு 17 வயது சிறுவனை கரெக்ட் செய்த திருமணமான பெண்.. இறுதியில் என்ன செய்தார் தெரியுமா?
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அழகுசின்னு காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சண்முகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் ஓயாமல் தொல்லை கொடுத்த கணவரை மனைவியே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.