- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: வேலையை சீக்கிரமாக முடிச்சிடுங்க! சென்னையில் இந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை.!
Power Shutdown in Chennai: வேலையை சீக்கிரமாக முடிச்சிடுங்க! சென்னையில் இந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மயிலாப்பூர்:
லேடி வில்லிங்டன் அயோத்தி நகர், ஆரிமுத்து தெரு, டாக்டர் பெசன்ட் சாலை, நல்லதம்பி தெரு, பழனி அம்மன் கோயில், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, டி.பி கோயில் தெரு, தோப்பு வெங்கடாசலம் தெரு, லியாயிட்ஸ் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
ராதா நகர் கணபதிபுரம் மெயின் ரோடு, செல்வராஜ் தெரு, கலைமகள் தெரு, எசக்கியம் தெரு, சன்னதி தெரு, நாகாத்தம்மன் கோவில் தெரு, மணி நாயக்கர் தெரு, 200 அடி சாலை, அக்னி குடியிருப்புகள் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
ராமாபுரம் நந்தம்பாக்கம், சி.ஆர்.ஆர். புரம், காசா கிராண்ட், காவியா கார்டன், ராமமூர்த்தி அவென்யூ, எம்.ஆர்.கே நகர், ராயாலா நகர் முதல் தெரு மெயின் ரோடு, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், திருமலை நகர், மூகாம்பிகை நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஐடி காரிடார்:
Etl எம்சிஎன் நகர், எஸ்பிஐ காலனி, தேரடி தெரு, ஆறுமுகம் அவென்யூ, பாலாஜி நகர், எம்.ஜி. சாலை, எல்லையம்மன் நகர், ஓஎம்ஆர், சிபிஐ காலனி, வேளச்சேரி மெயின் ரோடு, விஜிபி சாந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.