சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்கள் ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு உச்சநீதிமன்ற கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

06:22 PM (IST) Nov 16
நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அது டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என தெரியவந்துள்ளது
05:27 PM (IST) Nov 16
உள்ளாட்சி பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
05:04 PM (IST) Nov 16
உலகின் மிகவும் விசுவாசமான நாயான அகிடா வகையை சேர்ந்த ஹச்சிகோ 100 வயதை எட்டியுள்ளது
02:45 PM (IST) Nov 16
தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் நாளை மறுநாள் கூட்டப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது
02:23 PM (IST) Nov 16
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 58 பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
01:53 PM (IST) Nov 16
குழந்தைகளுடன் விளையாடிய பிரதமர் மோடி, அவர்களுக்கு மேஜிக் ட்ரிக்ஸ் செய்து காட்டிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
01:52 PM (IST) Nov 16
தனுஷ், ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு போட்டியாக விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
01:15 PM (IST) Nov 16
நியூஸ் க்ளிக் வழக்கு தொடர்பாக அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது
12:26 PM (IST) Nov 16
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தாயாருடன் வந்து விஜயவாடாவில் உள்ள கனக துர்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
11:30 AM (IST) Nov 16
தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் உள்ளிட்ட 7 வகையான விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
11:04 AM (IST) Nov 16
இயக்குனரும், நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் உடல்நலக்குறைவால் பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
10:27 AM (IST) Nov 16
104 கிலோ உடன் எடையுடன் இருந்த நடிகர் கார்த்தி, உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியது பற்றி பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி இருக்கிறார்.
09:59 AM (IST) Nov 16
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
09:53 AM (IST) Nov 16
10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதியும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது.
09:43 AM (IST) Nov 16
10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ம் தேதியும், 11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ம் தேதியும், 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது.
09:31 AM (IST) Nov 16
விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி யுவராஜ் தன்னுடைய பிறந்தநாளன்றே இரண்டாவது குழந்தை பெற்றெடுத்து உள்ளார்.
08:40 AM (IST) Nov 16
விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, நடிகர் அஜித்துடன் பணியாற்றுவது பற்றி மனம்திறந்து பேசி இருக்கிறார்.
08:07 AM (IST) Nov 16
19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நவம்பர் 1ம் தேதி 101 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது 57 ரூபாய் குறைந்து ரூ. 1,942க்கு விற்பனை செய்யப்படுகிறது.
08:05 AM (IST) Nov 16
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
07:26 AM (IST) Nov 16
பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் அதிமுகவால் தமிழகத்தில் நிச்சயமாக வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
07:25 AM (IST) Nov 16
நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இல்லை, அதிமுக கூட்டணியிலும் இல்லை என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.