குழந்தைகளுடன் விளையாடிய பிரதமர் மோடி, அவர்களுக்கு மேஜிக் ட்ரிக்ஸ் செய்து காட்டிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது அலுவலகத்தில் தம்மைச் சந்திக்க வந்த சில குழந்தைகளுடன் விளையாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. “என் இளம் நண்பர்களுடன் சில மறக்கமுடியாத தருணங்கள்” என தலைப்பிட்டு தனது சமூக ஊடக பக்கங்களில் அந்த வீடியோவை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

ஆனால், அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது. எப்போது எடுக்கப்பட்டது. அக்குழந்தைகள் யார் என்ற தகவல் அதில் பதிவிடப்படவில்லை. இருப்பினும், ஜார்கண்ட் சென்ற பிரதமர் மோடி, அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனின் பேரக் குழந்தைகளுடன் விளையாடிய வீடியோதான் அது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அவரும் உறுதிபடுத்தியுள்ளார்.

Scroll to load tweet…

அந்த வீடியோவில் இருக்கு சிறுமி, சிறுவனின் காதுகளை இழுத்து அவர்களுடன் விளையாடும் பிரதமர் மோடி, பின்னர் அவர்களுக்கு நாணயத்தை வைத்து மேஜிக் செய்து காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பகிரும் பலரும், பிரதமர் மோடியின் வித்தியாசமான பக்கம் இது எனவும், அவருக்குள் இருக்கும் குழந்தைத்தனம் வெளியே வந்துள்ளது எனவும் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…

Scroll to load tweet…

பிரதமர் மோடி எப்போதுமே குழந்தைகள் மீது அளப்பரிய பாசம் கொண்டவர். சமீபத்தில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கல்வி கொள்கையின் மூன்றாவது ஆண்டு தினத்தையொட்டி குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடினார். அவர்கள் செய்த பல்வேறு செயல்பாடுகளை கண்டு ரசித்த அவர், குழந்தைகளுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

Scroll to load tweet…

முன்னதாக, 2018ஆம் ஆண்டில் இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மகளது காதுகளை இழுத்து பிரதமர் மோடி விளையாடி காட்சிகள் வெளியாகின. இதேபோல், 2016ஆம் ஆண்டில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் மகனது காதுகளையும், 2014ஆம் ஆண்டில் ஜப்பான் சென்ற போது அங்கு ஒரு சிறுவனது காதுகளையும் பிடித்து இழுந்து பிரதமர் மோடி விளையாடியது நினைவுகூரத்தகக்து.