பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இனி இப்படி மழை பெய்தால் மட்டுமே விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து 7 வகையான விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Shocking news.. Holidays for schools only in case of heavy rains... School Education Department tvk

தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் உள்ளிட்ட 7 வகையான விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து 7 வகையான விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

* அதிகனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்கக் கூடாது எனவும், விடுமுறை குறித்த முடிவை பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் எடுக்க வேண்டும்.

* மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

* பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

* பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாட்களில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

* விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். 

* பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிகள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this linkhttps://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios