Published : Jun 14, 2023, 06:22 AM ISTUpdated : Jun 15, 2023, 08:34 AM IST

Tamil News Highlights : CBIக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு

சுருக்கம்

தமிழ்நாட்டில் இனி விசாரணை நடத்துவதற்கு முன்பு அரசின் முன் அனுமதி பெறுவது அவசியம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamil News Highlights : CBIக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு

12:29 AM (IST) Jun 15

அடுத்த டார்கெட் அமைச்சர் சிவசங்கர்.. ஜூனியர் செந்தில் பாலாஜி - திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் அண்ணாமலை

அமைச்சர் செந்தில் பாலாஜி 8 அடி தாண்டினால் அவரது சிஷ்யர் நான் 16 அடி தாண்டுவேன் என்று நிற்கிறார் அமைச்சர் சிவசங்கர் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

11:58 PM (IST) Jun 14

சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின்.. 200 கோடி விவகாரத்தை கிளப்பும் அண்ணாமலை - மீண்டும் பரபரப்பு

முந்தைய திமுக ஆட்சியின் போது மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தத்திற்காக ரூ. 200 கோடி பெற்றுக் கொண்டார் என்று, தமிழக பாஜக கடந்த ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டியிருந்தது என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

11:10 PM (IST) Jun 14

BYPASS சார்ஜிங்.! ஜேபிஎல் ஸ்பீக்கர்கள்.! குறைந்த விலையில் மாஸ் காட்டும் Infinix Note 30 5G ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி (Infinix Note 30 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

10:34 PM (IST) Jun 14

BREAKING : கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து.. பரபரப்பு வீடியோ

10:18 PM (IST) Jun 14

Uniform Civil Code : பொது சிவில் சட்டம் - அனைவரிடமும் கருத்து கேட்கும் சட்ட ஆணையம் !!

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது சட்ட ஆணையம். 30 நாட்களுக்குள் தங்களது கருத்துக்களை ஈமெயில் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

10:17 PM (IST) Jun 14

ஓலா, ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் TVS iQube - விலை எவ்வளவு தெரியுமா?

டிவிஎஸ் நிறுவனத்தின் சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐக்யூப் (TVS iQube) விலை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

08:58 PM (IST) Jun 14

சிபிஐக்கு தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து - அதிரடி காட்டிய தமிழ்நாடு அரசு !!

தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

08:20 PM (IST) Jun 14

Lu Lu Hypermarket : தமிழகத்தின் முதல் பிரம்மாண்ட லுலு மால் - கோவையில் திறப்பு

தமிழகத்தின் முதல் லுலு ஹைப்பர் மார்க்கெட் கோவையில் திறக்கப்பட்டுள்ளது.

07:23 PM (IST) Jun 14

120 பெண்கள்.. 1900 நிர்வாண படங்கள்.. 400 ஆபாச வீடியோக்கள்! யார் இந்த நாகர்கோவில் காசி.?

பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

06:54 PM (IST) Jun 14

புது போன் வாங்க போறீங்களா.. ஆல் ஏரியாவில் பட்டையை கிளப்பும் Nothing Phone 2 வரப்போகுது !!

இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள Nothing Phone (2) பற்றி பல்வேறு விவரங்கள் வெளியாகி உள்ளது. அவற்றை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

05:27 PM (IST) Jun 14

லண்டனில் கொல்லப்பட்ட ஹைதராபாத் மாணவி.. 27 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் !!

ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயதான கொந்தம் தேஜஸ்வினி என்ற பெண் லண்டன் வெம்ப்லியில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

05:06 PM (IST) Jun 14

பாஜகவின் கொங்கு மண்டல கனவை தகர்த்தவர் செந்தில் பாலாஜி.. பாஜகவின் சுயநலம் - மா.சுப்பிரமணியன்

திமுக ஊழல் கட்சி என்ற போலி கருத்தை நிரூபிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் வெற்றிக் கனவில் இருந்த பாஜகவின் எண்ணங்களை தகர்த்தவர் செந்தில்பாலாஜி என்று கூறியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

04:24 PM (IST) Jun 14

செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல்

அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது. வரும் 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் - சென்னை மாவட்ட முதன்மை அமர்வு உத்தரவு

04:23 PM (IST) Jun 14

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனுதாக்க

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கோரி திமுக வழக்கறிஞர்கள் நீதிபதி அல்லியிடம் மனுதாக்கல். அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் - திமுக வழக்கறிஞர்

03:06 PM (IST) Jun 14

அரசியல் காழ்புணர்ச்சி இல்லை: அண்ணாமலை

அரசியல் காழ்புணர்ச்சி இல்லை. இங்கே எங்கே அரசியல் காழ்புணர்ச்சி இருக்கிறது என்பதை விளக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

03:04 PM (IST) Jun 14

இந்த நீதிபதிகள்தான் விசாரிக்க உள்ளனர்!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்து இருந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்ரவர்த்தியை தலைமை நீதிபதி அறிவித்து இருக்கிறார்

02:14 PM (IST) Jun 14

கைது செய்யப்பட்ட நபரை முதல்வர் நேரில் சென்று பார்ப்பதா? நாடகமாடும் செந்தில் பாலாஜி! இறங்கி அடிக்கும் அண்ணாமலை!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து எந்த இடத்திலும் கடுகளவு கூட மோசமாக பேசியதே இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

அண்ணாமலை

 

01:06 PM (IST) Jun 14

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல்!

கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அலுவலகமான அபெக்ஸ் இம்பெக்ஸ் அலுவலகத்துக்கு சீல் வைத்து அமலாக்கத்துறை நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.
இதில், அமலாக்கத்துறை அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை திறக்க கூடாது எனவும், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தேசாரி நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

01:05 PM (IST) Jun 14

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது! வரவேற்று கொண்டாட வந்தவர்கள் கைது!

கரூரில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்துக் கொண்டாட வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

செந்தில் பாலாஜி....

 

12:46 PM (IST) Jun 14

3 முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு - மருத்துவமனை அறிக்கை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு உள்ளதை அடுத்து விரைவில் பை பாஸ் சர்ஜரி செய்ய  ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். 
 

10:58 AM (IST) Jun 14

தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞருக்கு அமெரிக்கா விருது!

இந்திய குழந்தைகள் உரிமை வழக்கறிஞருக்கு அமெரிக்க தொழிலாளர் துறையின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

10:55 AM (IST) Jun 14

நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? முதல்வர் ஸ்டாலின்

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

 

10:51 AM (IST) Jun 14

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் குடும்பத்தினர் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. 
 

08:31 AM (IST) Jun 14

ஓமந்தூரார் மருத்துவமனைக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓமந்தூர் மருத்துவமனையில் 6-வது மாடியிலுள்ள ஐசியூ வார்டில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

08:26 AM (IST) Jun 14

MLA அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட நபர் பஸ் மோதி மரணம்

கோவை : MLA வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட நபர் பஸ் மோதி மரணம்! cctv காட்சிகளை வெளியிட்ட போலீஸார்

MLA வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட நபர் பஸ் மோதி மரணம்

 

08:17 AM (IST) Jun 14

செந்தில் பாலாஜி காது அருகே வீக்கம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார். கண் திறந்து பார்க்கவில்லை. அவர் காதுக்கு அருகில் வீக்கம் உள்ளது: அமைச்சர் சேகர் பாபு பேட்டி

08:15 AM (IST) Jun 14

ஓமந்தூரார் மருத்துவமனையில் துணை ராணுவ வீரர்கள் குவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு. துணை ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

08:15 AM (IST) Jun 14

செந்தில் பாலாஜியால் பேசமுடியவில்லை - கே.என்.நேரு

நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேசமுடியவில்லை என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். 
 

08:12 AM (IST) Jun 14

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்.? புதிய அமைச்சர் யார்.? வெளியான பரபரப்பு தகவல்

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கி புதிய அமைச்சர் நியமிக்கப்படவுள்ளார். எனவே யார் அந்த புதிய அமைச்சர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

செந்தில் பாலாஜி

 

08:12 AM (IST) Jun 14

யார் இந்த செந்தில் பாலாஜி..? அரசியலில் நுழைந்து அமைச்சரானது எப்படி.? கடந்து வந்த பாதை...

மதிமுக மற்றும் அதிமுகவில்  அரசியல் பயணத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி தற்போது திமுகவில் பலம் வாய்ந்த அமைச்சர்களில் ஒருவராக இருந்து வந்தார். இந்தநிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்..

செந்தில் பாலாஜி

 

08:09 AM (IST) Jun 14

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 

செந்தில் பாலாஜி

 

06:51 AM (IST) Jun 14

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.. சட்டரீதியாக என்ன செய்யலாம்? அவசர ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின்.!

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை ஈடுபட்டுள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின்

06:24 AM (IST) Jun 14

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி.!

18 மணிநேரம் சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

செந்தில் பாலாஜி

 


More Trending News