VIDEO :கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் அலுவலகத்திற்கு சீல்! -அமலாக்கத்துறை அடுத்தடுத்து அதிரடி!
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அலுவலகமான அபெக்ஸ் இம்பெக்ஸ் அலுவலகத்துக்கு சீல் வைத்து அமலாக்கத்துறை நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.
நேற்று காலை 8 மணி முதல் கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையிலும், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையில் சோதனை நடத்தினர். முக்கிய கோப்புகள் கிடைத்தாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, செந்தில் பாலாஜி நெஞ்சுவலியா பாதிக்கப்படதைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! என்ன சொன்னார் தெரியுமா.?
இந்நிலையில், 12 மணி நேர அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரது அலுவலகமான அபெக்ஸ் இம்பெக்ஸ் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர்.
இதில், அமலாக்கத்துறை அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை திறக்க கூடாது எனவும், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தேசாரி நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் இந்த செந்தில் பாலாஜி..? அரசியலில் நுழைந்து அமைச்சரானது எப்படி.? கடந்து வந்த பாதை..