120 பெண்கள்.. 1900 நிர்வாண படங்கள்.. 400 ஆபாச வீடியோக்கள்! யார் இந்த நாகர்கோவில் காசி.?
பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரின் மகன் காசி. இவர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களைக் காதலிப்பதாகக் கூறி நேரில் சந்தித்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ஆபாச வீடியோ எடுத்திருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த இளம்பெண் மருத்துவர் ஒருவர் காசி மீது பாலியல், பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காசி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பொருளாதாரத்தில் வசதியான இளம்பெண்களுடன் நட்பாகப் பழகி, அவர்களைத் தனது காதல்வலையில் சிக்கவைக்கும் காசி, திருமணம் செய்வதாகக் கூறி வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
மேலும், ரகசிய கேமராவைத்து பெண்களுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடியோக்களை பதிவுசெய்துவந்திருக்கிறார். சுமார் 900 ஜிபி அளவுக்கு காசியிடம் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, பெண்களிடம் பணம் பறித்திருக்கிறார். சிறுமிகளும், திருமணம் ஆன பெண்களும் காசியின் வலையில் சிக்கியுள்ளனர்.
பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களும் இவனால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் பண மோசடி செய்தது உட்பட பல்வேறு வழக்குகளில் போலீஸார் இவரைக் கைது செய்தனர். இவன் மீது குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு முதலே காசி சிறையில் இருந்து வருகிறார்.
லண்டனில் கொல்லப்பட்ட ஹைதராபாத் மாணவி.. 27 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் !!
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். போக்சோ, கந்துவட்டி, பாலியல் வன்கொடுமை உள்பட பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் காசியின் செல்போன், லேப்டாப்பில் இருந்த ஆபாச படங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியனை போலீஸார் கைதுசெய்தனர்.
அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். நாகர்கோவில் காசி தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். இதில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.