அமைச்சர் செந்தில் பாலாஜி : முதல்வர் ஆசை நிறைவேறியது.. 2016ல் பேசிய வீடியோவை போட்டு வெறுப்பேற்றும் அண்ணாமலை
சென்னையில் பசுமை வழிச்சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
அதிமுக ஆட்சியில் இருந்த போது அதில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், இதில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.
இந்த தடையை உச்சநீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மீண்டும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜி மற்றும் அவருக்குத் தொடர்புடையோர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அதன்படி தலைநகர் சென்னையில் பசுமை வழிச்சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் ஆயுதங்களோடு அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக என தகவல் வெளியாகி உள்ளது.
உண்மை சுடத்தான் செய்யும்.. என்ன பண்றது.? அதிமுகவை விடாமல் சுழற்றி அடிக்கும் பாஜக
அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடத்தும் சோதனையை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது.
அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் இச்சோதனை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது. தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஏர் கூலர் + அரை நாள் போராட்டம்.. ஜெயலலிதா சர்ச்சை முடிவதற்குள் கருணாநிதியை வம்புக்கு இழுத்த அண்ணாமலை