Published : Feb 13, 2024, 07:23 AM ISTUpdated : Feb 14, 2024, 12:00 AM IST

Tamil News Live Updates: சபாநாயகர் திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்துகொண்டார்: அண்ணாமலை

சுருக்கம்

பேரவையில் சபாநாயகர் அப்பாவு திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்துகொண்டார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tamil News Live Updates: சபாநாயகர் திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்துகொண்டார்: அண்ணாமலை

12:00 AM (IST) Feb 14

“நெஞ்சு பொறுக்குதில்லையே!”.. இயக்குநர் கே.பாக்யராஜ் சொன்ன கதை.. உண்மை என்ன? கோவை எஸ்.பி விளக்கம்!

இயக்குநர்  கே.பாக்யராஜ் சமீபத்தில் பேசி வெளியிட்ட நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வீடியோ குறித்து கோவை மாவட்ட எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

11:29 PM (IST) Feb 13

என் மகன் போனாலும்.. ஏராளமான மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள்.. உருக்கமாக பேசிய சைதை துரைசாமி.!

என் மகன் போனாலும் எனக்கு நிறைய மகன்கள் மகள்களும் இங்கே வந்து இருக்கிறார்கள் என்று மகன் வெற்றி தகனம் செய்யப்பட்ட பிறகு சைதை துரைசாமி உருக்கமாக பேசியுள்ளார்.

10:48 PM (IST) Feb 13

வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!!

10:47 PM (IST) Feb 13

நா தழு தழுக்க உருகிப் பேசிய சைதை துரைசாமி!!

10:46 PM (IST) Feb 13

வெற்றி துரைசாமிக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!!

10:46 PM (IST) Feb 13

வெற்றி துரைசாமிக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி!!

10:38 PM (IST) Feb 13

ரொம்ப கம்மி பட்ஜெட்டில் லடாக்கை ஜாலியாக சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை எவ்வளவு?

குறைந்த விலையில் ஐஆர்சிடிசி லடாக் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

10:23 PM (IST) Feb 13

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வில் 35,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே மாதரம் பாடினர்..

அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 'அஹ்லான் மோடி' நிகழ்வின் போது, அங்கிருந்தோர் வந்தே மாதரம் பாடினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

09:50 PM (IST) Feb 13

வீட்டில் இந்த லிமிட்டை மீறி பணத்தை வைக்காதீங்க.. இல்லைனா வருமான வரி நோட்டீஸ் வீட்டுக்கு வரும்..

வீட்டில் இந்த லிமிட்டை விட அதிகமான பணத்தை வீட்டில் வைத்திருந்தால், நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கான விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

08:04 PM (IST) Feb 13

ரூ.18000 விலை குறைப்பு.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஆஃபர் அறிவித்த ஒகாயா.. இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க..

ஒகாயா நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர்களுக்கு ரூ.18,000 வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

07:52 PM (IST) Feb 13

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் இறுதி அஞ்சலி நிகழ்வு..!

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

07:31 PM (IST) Feb 13

முன்னாள் மேயர் சைதை.துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் மீட்பு.. இன்று நடைபெறும் இறுதி அஞ்சலி நிகழ்வு!

சுமார் 8 நாள் தேடுதலுக்கு பிறகு வெற்றி துரைசாமி அவர்களுடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. இன்று  மாலை சென்னை கொண்டுவரப்பட்ட அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

 

06:54 PM (IST) Feb 13

38 மணிநேரம்.. பாஸ்ட் சார்ஜிங்.. இந்த விலைக்கு இப்படியொரு Redmi Buds 3 இருக்கா..

குறைந்த விலையில் தரமான இயர் பட்ஸ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது சியோமி நிறுவனம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

06:29 PM (IST) Feb 13

ரயிலில் ஏறும் மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்தியன் ரயில்வே..

ரயிலில் மூத்த குடிமக்கள் இந்த வசதிகளைப் பெறுவார்கள் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

05:52 PM (IST) Feb 13

அபுதாபியில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி, அதிபர் அல் நஹ்யான்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் யுபிஐ சேவையை பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்

 

05:44 PM (IST) Feb 13

அபுதாபியில் பிரதமர் மோடி - நேரலை!!

05:38 PM (IST) Feb 13

அபுதாபியில் UPI RuPay கார்டு அறிமுகம்!!

05:21 PM (IST) Feb 13

அபுதாபியில் பிரதமர் மோடி!!

04:58 PM (IST) Feb 13

பாஜகவில்தான் எதிர்காலம் உள்ளது: அசோக் சவான்!

பாஜகவில்தான் எதிர்காலம் உள்ளது என அக்கட்சியில் இணைந்த பின்னர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்

 

04:38 PM (IST) Feb 13

பிரதமர் மோடி அபுதாபி சென்றடைந்தார் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை சந்திக்கின்றார்!

பிரதமர் மோடி அபுதாபி சென்றடைந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை சந்திக்கிறார், மேலும் பல பெரிய சமூக நிகழ்வுகள் இந்த இரண்டு நாள் பயணத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

03:24 PM (IST) Feb 13

உலகின் சிறந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கிய இந்தியா: மைக்கேல் ஸ்பென்ஸ் புகழாரம்!

உலகின் சிறந்த டிஜிட்டல் பொருளாதாரம், நிதிக் கட்டமைப்பை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக நோபல் பரிசு பெற்ற மைக்கேல் ஸ்பென்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்

 

02:56 PM (IST) Feb 13

வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்திய அஜித்

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவால் சோகமடைந்த நடிகர் அஜித், அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

 

02:52 PM (IST) Feb 13

அமைச்சர் பதவி ராஜினாமா: செந்தில் பாலாஜிக்கு நாளை ஜாமீன் கிடைக்குமா? பின்னணி என்ன?

அமைச்சர் பதவியை  செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதால் நாளைய விசாரணையின்போது, அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

 

02:15 PM (IST) Feb 13

இந்திய வம்சாவளியினருக்குப் பிரதமர் மோடி பாராட்டு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முன்னிட்டு இந்திய வம்சாவளியினருக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்

 

02:03 PM (IST) Feb 13

PM Surya Ghar Muft Bijli Yojana வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் பிரதமர் சூர்யா கர் எனும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்

 

01:58 PM (IST) Feb 13

விவசாயிகளை அடைக்க திறந்தவெளி சிறைச்சாலை: மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி அரசு!

பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது

 

01:51 PM (IST) Feb 13

தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கும் லால் சலாம்; லாபத்தை அள்ளிக்குவிக்கும் லவ்வர் - 4 நாள் வசூல் நிலவரம் இதோ

பிப்ரவரி 9-ந் தேதி தமிழ்நாட்டில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆன ரஜினியின் லால் சலாம் மற்றும் மணிகண்டனின் லவ்வர் ஆகிய திரைப்படங்களின் வசூல் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

01:09 PM (IST) Feb 13

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா இணையும் முதல் பாலிவுட் படம்.. ரிலீஸ் தேதியுடன் வந்த அசத்தல் அறிவிப்பு

சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் இந்தியில் ரீமேக் ஆகி இருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

12:08 PM (IST) Feb 13

விவசாயிகள் போராட்டம்: நெட்டிசன்கள் கேள்வி!

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நெடிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

 

11:18 AM (IST) Feb 13

டெல்லி சலோ: மீண்டும் துவங்கியது விவசாயிகள் போராட்டம்!

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்

 

10:41 AM (IST) Feb 13

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று ஐக்கிய அமீரகம் செல்கிறார்!

பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக இன்று ஐக்கிய அமீரகம் செல்லவுள்ளார்

 

10:34 AM (IST) Feb 13

Today Gold Rate in Chennai : அப்பாடா! நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. ஒரு வழியாக தங்கம் விலை குறைந்தது.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:29 AM (IST) Feb 13

ஆளுநர் மீது நடவடிக்கை.? சட்டப்பேரவையில் உரிமை மீறல் கொண்டு வர திட்டம்- பரபரபக்கும் தமிழக அரசியல் களம்

தமிழக அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையை பேச மறுத்து தனது சொந்த கருத்தை பேசிய நிலையில் அது சட்டப்பேரவை அவைக்குறிப்பில் நீக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த வீடியோவை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் அவை உரிமை மீறல் கொண்டுவரப்படவுள்ளது. 

 

10:16 AM (IST) Feb 13

கல்யாணமாகி ஒரு வருஷம் கூட ஆகல; அதற்குள் காதல் கணவரை பிரிந்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி - என்ன ஆச்சு?

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி, தான் சிங்கிளாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

09:40 AM (IST) Feb 13

வெற்றி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு! மகன் உடலை மீட்டவர்களுக்கு சொன்னபடி ஒரு கோடி சன்மானம்..!

இமாச்சலின் சட்லஜ் நதியில் 8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டத்தை அடுத்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

09:33 AM (IST) Feb 13

ஆபாச பட ஹீரோ ஜானி சின்ஸ் உடன் நடித்த ரன்வீர் சிங் - வீடியோ இதோ

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான ஜானி சின்ஸ் உடன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் விளம்பரம் ஒன்றில் நடித்ததை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

09:08 AM (IST) Feb 13

எனக்கும் அரசியல் ஆசை இருக்கு... விஜய்க்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம் - நடிகை வாணி போஜன் ஓபன் டாக்

நல்லது செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என கூறிய வாணி போஜன், தனக்கும் அரசியல் ஆசை இருந்ததாக கூறினார்.

08:34 AM (IST) Feb 13

புருஷனுக்கு தெரியாமல் கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. இறுதியில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கள்ளக்காதல் விவகாரத்தில் திருமணமான பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

08:33 AM (IST) Feb 13

சிவகார்த்திகேயனா இது? கமல் படத்துக்காக கட்டுமஸ்தான் உடற்கட்டுடன் SK - போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்

கமல்ஹாசன் தயாரிக்கும் எஸ்.கே.21 திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தீவிர ஒர்க் அவுட் செய்து கட்டுமஸ்தான் உடற்கட்டுக்கு மாறி இருக்கிறார்.

07:42 AM (IST) Feb 13

இபிஎஸ்க்கு சந்தேகம் இருந்தால் கிளாம்பாக்கத்து வாங்க! என்னென்ன வசதிகள் இருக்குனு காட்டுறோம்! அமைச்சர் சிவசங்கர்

ஆசியாவிலேயே சிறந்த பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விளங்கி வருகிறது என இபிஎஸ் குற்றச்சாட்டு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். 


More Trending News