முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் இறுதி அஞ்சலி நிகழ்வு..!

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

The body of Vetri Duraisamy, son of former Chennai Corporation Mayor Saithai Duraisamy, has been laid to rest-rag

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45), விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்துக்கு சென்றார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங்நளா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்துள்ளது.

The body of Vetri Duraisamy, son of former Chennai Corporation Mayor Saithai Duraisamy, has been laid to rest-rag

9 நாளாக வெற்றி துரைசாமியின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவில், அவரது உடல் நேற்று மீட்கப்பட்டது. வெற்றி துரைசாமியின் உடல் இன்று (பிப்.13) சென்னை கொண்டுவரப்படுகிறது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். சென்னை கொண்டுவரப்படும் வெற்றி துரைசாமியிடன் உடல் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு இன்று மாலை கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios