விவசாயிகள் போராட்டம்: நெட்டிசன்கள் கேள்வி!
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நெடிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்காக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் தங்களது ஊர்களில் இருந்து ட்ராக்டர்களில் புறப்பட்டுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
கடந்த 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, விவசாயிகள் மீண்டும் போராட்ட களம் கண்டுள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைகளில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் சுமார் ஓராண்டுக்கு நீடித்த நிலையில், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து, விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், விவசாயிகளின் போராட்டம் மீண்டும் நடைபெறவுள்ளது. ஆனால், போராட்டத்தை முறியடிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
டெல்லி சலோ: மீண்டும் துவங்கியது விவசாயிகள் போராட்டம்!
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நெடிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன்படி, விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு ஏஜென்சிகள் உள்ளாதாகவும், அடுத்து வரும் தேர்தலில் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வெளிநாட்டு ஏஜென்சிகள் சதி செய்து விவசாயிகளின் கோரிக்கைக்கான அபத்தமான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் எஸ்.டி.க்கள் இல்லை, அங்கு போராட்டக்கார்களில் பெரும்பாலோர் அச்சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே, அந்த கோரிக்கையும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது எப்படி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்வது என்பது கிட்டத்தட்ட 22-24 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பை ஏற்படுத்தும் எனவும், மின்சார சீர்திருத்தங்கள் நிறுத்தப்பட்டால் நாடு பின்னோக்கி தள்ளப்படும் எனவும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையானது சர்வதேச வர்த்தகத் துறையில் இந்தியா அடைந்த அனைத்து ஆதாயங்களையும் தியாகம் செய்வதாகும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கோரிக்கைகளின் பட்டியலை பார்த்தால், பழங்குடியினரின் உரிமை மற்றும் விவசாயிகளின் போராட்டத்தின் உறவு விளங்குகிறது எனவும் கூறுகிறார்கள்.
விவசாயிகளை போலீசார் தாக்க மாட்டார்கள். ஆனால், அவர்களது ஏற்பாடுகளைப் பாருங்கள். அவர்கள் ஏழை விவசாயிகளா அல்லது வன்முறைக்கு தயாராகிறார்களா? அவர்கள் பேச்சுவார்த்தைகளை விரும்பவில்லை என்று அர்த்தம் என பதிவிட்டு, டிராக்டர் ஒன்று சுற்றிலும் கவசம் போன்று தயார் செய்யப்படும் வீடியோவை நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் பயிர்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். பின்னர் அதே பயிரை பொதுமக்களுக்கு மலிவான விலையில் வழங்க வேண்டும். இவை இரண்டும் எப்படி சாத்தியம் என்று எந்த பொருளாதார நிபுணரும் சொல்ல முடியுமா? என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகளின் கோமாளித்தனங்கள் குறித்து மக்கள் சந்தேகமடைந்துள்ளனர். குறுப்பிட்ட பகுதிகளுக்கு வெளியே மக்கள் ஆதரவு அவர்களுக்கு இருக்காது. கடந்த முறை விவசாயிகளின் போராட்டம் இந்திய அரசு மற்றும் சீக்கியர்களுக்கு எதிராக பஞ்சாபில் திரித்து கூறப்பட்டது. மேலும், தங்களை ஏழை என்று கூறிக் கொள்ளும் விவசாயிகள் எப்படி மூன்று கோடி மதிப்பிலான மெர்சிடஸ் காரில் அமர்ந்து கொண்டுள்ளனர் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.