டெல்லி சலோ: மீண்டும் துவங்கியது விவசாயிகள் போராட்டம்!

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்

Farmers begin their Delhi Chalo march urges various demands smp

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைகளில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் சுமார் ஓராண்டுக்கு நீடித்த நிலையில், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து, விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்து.

இந்த நிலையில், அதேபோன்றதொரு போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். 

இதற்காக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் தங்களது ஊர்களில் இருந்து ட்ராக்டர்களில் புறப்பட்டுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, விவசாயிகள் மீண்டும் போராட்ட களம் கண்டுள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று ஐக்கிய அமீரகம் செல்கிறார்!

மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், விவசாயிகள் போராட்டம் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், அதனை முறியடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, டெல்லி எல்லையையொட்டிய மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் ஹிசாரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்குள் நுழைய முடியாத பட்சத்தில் எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

டெல்லி எல்லைகளின் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் ஆணி அமைத்து விவசாயிகளின் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தி அவர்களை தடுக்க திட்ட்டமிடப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலம் அம்பாலா அருகே ஷம்பு எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அம்மாநிலம் ஜஜ்ஜார் டி.எஸ்.பி., ஷம்ஷேர் சிங் கூறுகையில், “திக்ரி எல்லையில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். சிசிடிவி கேமராக்கள், மைக்குகள் வைக்கப்பட்டுள்ளன. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று டெல்லிக்குள் நுழையும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளாதற்கு இடையே, விவசாயிகள் ‘தொல்லை’ செய்வதை தடுக்க  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆதிஷ் அர்வாலா தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios