அதிமுக ஆட்சியை தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது என்று அண்ணாமலையை சீண்டியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

12:12 AM (IST) Jun 13
தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது என்று கூறியிருந்தார் அண்ணாமலை.
11:40 PM (IST) Jun 12
சென்னை கே.கே நகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. பேருந்துகள் லாரி, கார்கள், ஆட்டோக்கள் என எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
11:09 PM (IST) Jun 12
பதவிக்கும், பவிசுக்கும் ஆசைப்பட்டு அண்ணாமலை அரசியலுக்கு வரவில்லை என்று பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
10:29 PM (IST) Jun 12
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அங்கு பொறியாளராக பணிபுரிய 14 வயது சிறுவனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த சிறுவன் யார்? அவனை பற்றிய முழு தகவல்களை பார்க்கலாம்.
10:14 PM (IST) Jun 12
எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கும், பிற மாநில மொழிகளுக்கும் இழைக்கப்படும் அவமானம் ஆகும். இதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
08:42 PM (IST) Jun 12
ரூ.40,000 கோடி டாஸ்மாக் மூலம் வருமானம் வருகிறது என்றால் அரசு அவமானப்பட வேண்டும். 2004 முதல் 2009 வரை டி.ஆர் பாலு மத்திய அமைச்சரவையில் இல்லை. எல்லாத்துக்கும் ஊழல் தான் காரணம் என்று பேசியுள்ளார் அண்ணாமலை.
07:49 PM (IST) Jun 12
அதிமுக ஆட்சியை தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது என்று அண்ணாமலையை சீண்டியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
07:33 PM (IST) Jun 12
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரும், சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அதை பற்றி இங்கு காண்போம்.
06:49 PM (IST) Jun 12
இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
06:03 PM (IST) Jun 12
மத்திய அமைச்சர் அமித் ஷா வரும்போது மின்தடை போன்ற பிரச்சினை நடந்திருக்கிறது. அவர் பயண திட்டம் குறித்து மாநில அரசுக்கு ஏற்கெனவே தெரியும் என்று தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டி உள்ளார் குஷ்பு.
05:36 PM (IST) Jun 12
குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5000 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
05:05 PM (IST) Jun 12
05:00 PM (IST) Jun 12
மருத்துவ பொது கலந்தாய்வை மத்திய அரசு நடத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
03:31 PM (IST) Jun 12
முண்டாசுப்பட்டி, ராட்சசன் என இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குனர் ராம்குமார் - நடிகர் விஷ்ணுவிஷால் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
01:27 PM (IST) Jun 12
அனுமனுக்காக திரையரங்கில் ஒதுக்கியுள்ள சீட்டுக்கு அருகில் அமர்பவர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக பரவிய தகவல் குறித்து ஆதிபுருஷ் படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
12:48 PM (IST) Jun 12
விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை சங்கீதா, செருப்பு திருடர்கள் குறித்து பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்.
12:31 PM (IST) Jun 12
சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் ஜூன் 15ம் தேதி திறந்து வைக்கிறார். கடந்த 5-ம் தேதியே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது. திட்டமிட்ட தேதியில் குடியரசுத் தலைவா் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது.
11:51 AM (IST) Jun 12
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகளான கதீஜா ரகுமான், ஹலிதா ஷமீம் இயக்கி வரும் மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.
11:43 AM (IST) Jun 12
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக UPSC நடத்திய முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது. 14,624 பேர் தேர்ச்சி பெற்று மெயின்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
11:38 AM (IST) Jun 12
ஆந்திராவில் கார் மீது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
10:58 AM (IST) Jun 12
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:56 AM (IST) Jun 12
மீடூ என்பது கன்றாவியான விஷயம் எனவும், அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
10:00 AM (IST) Jun 12
வி.இசட் துரை இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாக நடித்துள்ள தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.
09:32 AM (IST) Jun 12
கோலிவுட் திரையுலகில் கோடிகளில் சம்பளம் வாங்கி, பணக்கார நடிகைகள் பட்டியலில் டாப் 8 இடத்தை பிடித்துள்ள நடிகைகள் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:42 AM (IST) Jun 12
உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்துபோன ரோபோ சங்கர் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
08:02 AM (IST) Jun 12
தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமரை உருவாக்குவோம் என அமித்ஷா பேசியிருப்பது மக்களை ஏமாற்றுவதற்கான செயல். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழர்கள் மயங்க மாட்டார்கள். கர்நாடகாவில் பிரதமர் 5 இடங்களில் பரப்புரை செய்தும் பாஜகவால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.
07:51 AM (IST) Jun 12
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழுக்க முழுக்க கற்பனைக் கதையை உருவாக்கி, தமிழ்நாட்டிற்குப் பல திட்டங்களை அள்ளி வீசியது போல் “கானல் நீர்” தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார்.
07:16 AM (IST) Jun 12
சென்னையில் 387வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.