இதெல்லாம் ஏமாற்று பேச்சு! தமிழக வாக்காளர்கள் பக்குவம் அடைந்தவர்கள்! மயங்க மாட்டார்கள்! பாஜகவை அலறவிடும் திருமா

தமிழகத்தில் முதல்வர் ஆகவேண்டும் என்று மட்டும் நினைக்காமல், தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என நினைக்க வேண்டும். ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். 

Cheating talk! The voters of Tamil Nadu have matured! thirumavalavan

தமிழக வாக்காளர்கள் பக்குவம் அடைந்தவர்கள். நாடாளுமன்ற தேர்தலை திமுக கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்திக்கும் என திருமாவளவன் கூறியுள்ளார். 

சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தென்சென்னை மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அப்போது நிர்வாகிகளின் மத்தியில் பேசிய அமித் ஷா;- சென்னை விமான நிலையத்தை விட்டு நான் வெளியேறியபோது மின் தடை ஏற்பட்டது. இந்த இருளை கண்டு அச்சப்பட தேவையில்லை. தமிழகம் இருளில் இருப்பதை இந்த மின் தடை காட்டுகிறது. தமிழகத்துக்கு பாஜக வெளிச்சத்தை கொடுக்கும்.

இதையும் படிங்க;- தொண்டர்களை சந்தித்த அமித்ஷா! மின் இணைப்பு துண்டிப்பு! பொங்கிய பாஜகவினர் - மின் வாரியம் விளக்கம்

Cheating talk! The voters of Tamil Nadu have matured! thirumavalavan

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழகத்தில் முதல்வர் ஆகவேண்டும் என்று மட்டும் நினைக்காமல், தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என நினைக்க வேண்டும். ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இதை பாஜகவால்தான் செய்ய முடியும். இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். கடந்த காலத்தில் தமிழகத்தில் இருந்து 2 பேருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு இருந்தும் நடக்கவில்லை. இதற்கு திமுக தான் காரணம் என மத்திய உள்துறை அமித்ஷா குற்றம்சாட்டியிருந்தார். 

இதையும் படிங்க;-  தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செஞ்சது.? லிஸ்ட் போட்டு பார்க்கலாமா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்

Cheating talk! The voters of Tamil Nadu have matured! thirumavalavan
 
இந்நிலையில், திருவள்ளூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொல்.திருமாவளவன்;- தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமரை உருவாக்குவோம் என அமித்ஷா பேசியிருப்பது மக்களை ஏமாற்றுவதற்கான செயல். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழர்கள் மயங்க மாட்டார்கள். கர்நாடகாவில் பிரதமர் 5 இடங்களில் பரப்புரை செய்தும் பாஜகவால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.

இதையும் படிங்க;-   ஒரு எம்.பி. சீட்டை கூட பாஜகவுக்கு தமிழக மக்கள் கொடுக்க மாட்டார்கள்! அமித் ஷாவுக்கு மாஸ் பதிலடி கொடுத்த TR.பாலு

Cheating talk! The voters of Tamil Nadu have matured! thirumavalavan

தமிழக வாக்காளர்கள் பக்குவம் அடைந்தவர்கள். நாடாளுமன்ற தேர்தலை திமுக கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்திக்கும் என திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios