தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செஞ்சது.? லிஸ்ட் போட்டு பார்க்கலாமா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்
தமிழ்நாட்டிற்கு பாஜக என்ன செய்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடும் நமதே நாற்பது நமதே என்பதை உரக்கச் சொல்வோம் என்று சேலம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.
சேலத்தில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , திராவிட இயக்கம் உருவான மண் சேலம். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியை மக்கள் அகற்றிவிட்டு அதனை நம்மிடம் வழங்கி உள்ளனர். திமுக ஆட்சியை வீழ்த்தவே முடியாது என்ற நிலையை உருவாக்கி கொண்டிருக்கிறேன்.
இனி இந்த மண்ணில் திமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வர இருக்கிறது. தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் சேலத்தில் பெரு வாரியாக வெற்றி பெற திமுகவினர் பாடுபட வேண்டும். அடுத்த ஆண்டுதான் நாடாளுமன்றத் தேர்தல் என திமுகவினர் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.
நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வர இருக்கிறது. அதற்கு திமுக தயாராக இருக்க வேண்டும். பாஜகவின் செல்வாக்கு நாடு முழுவதும் சரிந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டியே ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு செய்ததற்கான பட்டியலை சொல்லக்கூடிய ஆற்றல் அமித்ஷாவுக்கு இருக்கிறதா ? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்துக்கு என்ன செய்தனர் என்பதை சென்னைக்கு வரும் அமித்ஷா பட்டியலிட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து 8 ஆண்டுகள் ஆகியும் மதுரையில் எய்ம்ஸ் கட்ட நடவடிக்கை எடுத்தனரா?. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பணம் ஒதுக்க மனம் இல்லையா? ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தோல்வி சந்தித்து வரும் கட்சி தான் அதிமுக.
இதையும் படிங்க..தமிழகத்தை சேர்ந்த 25 பேர்.. தேர்வு செய்த தமிழக பாஜக.! அமித்ஷாவுடன் திடீர் மீட்டிங் - முழு பின்னணி
காட்டாற்று வெள்ளத்தில் வந்த கரடியை பிடித்தவன் ஒருவன் அதைவிட நினைத்தான். அவனை பிடித்துக்கொண்டது கரடி. வெள்ளத்தில் வந்த கரடியை பிடித்தவனை கரடி பிடித்துக்கொண்ட கதைதான் அதிமுக - பாஜக கூட்டணி. கொத்தடிமை கூட்டமான அதிமுகவை நம்பி தேர்தலுக்கு வந்திருக்கிறது பாஜக.
காலத்தின் சூழல் மாறிவிட்டது. சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களை மக்களிடம் சேர்க்க வேண்டும். திமுக ஆட்சி தொடர்பாக பொய்யாக பரப்பும் தகவல்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டும். அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் கட்சியினரின் பிரச்சினைகளை தீர்க்காவிடினும் காது கொடுத்து கேட்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
இதையும் படிங்க..2024 தேர்தல் முதல் ஜிஇ ஒப்பந்தம் வரை.. பிரதமர் மோடியின் அமெரிக்கா டூர் பிளான் - ஜோ பைடன் போட்ட புது ஸ்கெட்ச்