கோலிவுட்டின் பணக்கார நடிகைகள் யார்... அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு? - முழு விவரம் இதோ
கோலிவுட் திரையுலகில் கோடிகளில் சம்பளம் வாங்கி, பணக்கார நடிகைகள் பட்டியலில் டாப் 8 இடத்தை பிடித்துள்ள நடிகைகள் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நயன்தாரா
தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது நடிகை நயன்தாரா தான். இவர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். கோலிவுட்டின் பணக்கார நடிகையும் இவர் தான். இவரின் சொத்து மதிப்பு சுமார் 165 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
அனுஷ்கா
பணக்கார நடிகைகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளவர் அனுஷ்கா ஷெட்டி தான். இவர் தற்போது மார்க்கெட் இழந்து தவித்து வந்தாலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை டாப் கியரில் சென்றுகொண்டிருந்தார் அனுஷ்கா. இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.130 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமன்னா
ரசிகர்கள் செல்லமாக மில்க் பியூட்டி என அழைக்கப்படும் நடிகை தமன்னா தான் பணக்கார நடிகைகள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். தமிழில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள தமன்னா, டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் செம்ம பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.110 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
சமந்தா
பணக்கார நடிகைகள் பட்டியலில் நடிகை சமந்தாவுக்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது. இவர் தற்போது நடிகை நயன்தாராவுக்கு இணையாக ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.101 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... அந்த நோய் வந்ததால் தான் மெலிந்து போனேன்... நான்கே மாதத்தில் மீண்டு வந்தது எப்படி? - மனம் திறந்த ரோபோ சங்கர்
திரிஷா
சவுத் இந்தியன் குயின் என அழைக்கப்படும் நடிகை திரிஷா, பணக்கார நடிகைகள் பட்டியலில் 5-ம் இடம் பிடித்துள்ளார். பொன்னியின் செல்வனுக்கு பின்னர் நடிகை திரிஷாவின் கெரியர் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டதால், தற்போது அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இவரின் சொத்து மதிப்பு ரூ.85 கோடி இருக்குமாம்.
ராஷ்மிகா
குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டு ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தா, பணக்கார நடிகைகள் பட்டியலில் 6-ம் இடம் பிடித்துள்ளார். இவரும் ஒரு படத்துக்கு ரூ.5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறாராம். இவரின் சொத்து மதிப்பு ரூ.65 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே, பணக்கார நடிகைகள் பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளார். தமிழில் இவருக்கு பெரியளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும், பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் செம்ம டிமாண்ட் உள்ள நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பூஜா ஹெக்டே. இவரின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி இருக்குமாம்.
கீர்த்தி சுரேஷ்
பணக்கார நடிகைகள் பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் செம்ம பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இவரின் சொத்து மதிப்பு ரூ.40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி சொல்ல போகிறாரா தளபதி விஜய்...?