பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் ஜோகோவிச். இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

12:31 AM (IST) Jun 12
தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெல்வதுதான் இலக்கு என அதிரடியாக கூறினார் அமித்ஷா. இது அதிமுக தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
11:53 PM (IST) Jun 11
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 28வது எபிசோட்.
11:32 PM (IST) Jun 11
சென்னையில் இன்று பேட்டியளித்த அமித்ஷா, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெல்வதுதான் இலக்கு என அதிரடியாக கூறினார். இது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்றே சொல்லலாம்.
11:12 PM (IST) Jun 11
ஜெகன்நாத் கோவில் ரத யாத்திரை இந்த ஆண்டு ஜூன் 20-ம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் பின்னணியில் ஜெகநாதர் கோயிலின் ரகசியம் ஒன்றை தெரிந்து கொள்ளலாம்.
10:43 PM (IST) Jun 11
தமிழ் மொழியின் தொன்மைக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. உலகின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையை பேசி வருகிறார். தமிழின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் என்று பேசியுள்ளார் அமித்ஷா.
08:44 PM (IST) Jun 11
உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 77 சதவீத அங்கீகாரத்துடன் முதலிடத்தில் உள்ளார்.
07:47 PM (IST) Jun 11
Samsung Galaxy S22 விலை தற்போது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. நல்ல விலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனை வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.
07:08 PM (IST) Jun 11
கோவையில் திமுக கவுன்சிலர் மற்றும் வார்டு செயலாளர் தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
06:20 PM (IST) Jun 11
திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் மதிப்பெண் பட்டியல் சர்ச்சை குறித்து செய்தி வெளியிட்ட ஏசியாநெட் நியூஸ் தலைமை நிருபர் அகிலா நந்தகுமார் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
05:58 PM (IST) Jun 11
தாமிரபரணியை சுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
05:28 PM (IST) Jun 11
உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ள 10வது பெரிய நோயான ஏஎம்ஆர், அதிகளவு கோழியை உணவாக உட்கொள்வதால் ஆபத்து இருப்பதாக கோழிப்பண்ணை தொழில்துறை கால்நடை மருத்துவர்கள் சங்கம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி தவறானது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
03:07 PM (IST) Jun 11
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
02:39 PM (IST) Jun 11
02:06 PM (IST) Jun 11
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தான் நடித்த படம் பிளாப் ஆகும் என அப்படத்தின் கதை கேட்ட உடனே தெரிவித்த சம்பவம் பற்றி பிரபல இயக்குனர் மனம்திறந்து பேசி உள்ளார்.
01:38 PM (IST) Jun 11
பிறந்தநாளை கொண்டாட அந்தமானுக்கு சென்றிருந்த நடிகை தர்ஷா குப்தா, அங்கு பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளிக்கும் விதமாக தான் முதன்முறையாக நடத்தியுள்ள பிகினி போட்டோஷூட்டின் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் தர்ஷா.
12:50 PM (IST) Jun 11
11:45 AM (IST) Jun 11
கமலின் மருதநாயகம், விஜய்யின் யோஹன், அஜித்தின் மிரட்டல் உள்பட ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்கள் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே கைவிடப்பட்டு இருக்கின்றன. அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
10:27 AM (IST) Jun 11
சிட்டாடெல் வெப் தொடரின் படப்பிடிப்புக்காக செர்பியா நாட்டுக்கு சென்றுள்ள நடிகை சமந்தா, அங்குள்ள பப்பில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
09:45 AM (IST) Jun 11
நடிகை நீலிமா ராணியின் முதல் கணவர் யார் என்பது குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது குறித்து அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
08:48 AM (IST) Jun 11
மாவீரன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கி உள்ள ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் சிவகார்த்திகேயன் முக்கிய டீல் ஒன்றை பேசி உள்ளாராம்.
08:10 AM (IST) Jun 11
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமான தமன், ரூ.40 லட்சம் ஓட்டல் பில்லை நீட்டி தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
08:00 AM (IST) Jun 11
9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து வேலூர் பொதுக்கூட்டத்தில் நான் பேசும் போது பதில் தெரிவிக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமித்ஷா வருகையின் போது மின்சார துண்டிக்கப்பட்டதில் தான் அரசியல் செய்ய விரும்பவில்லையெனவும் கூறினார்.
07:30 AM (IST) Jun 11
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு வந்த ஆஸ்திரேலியா துணைத் தூதர் ஓஃபேரல், சூப்பர்ஸ்டாரை சந்தித்து பேசினார்.
07:14 AM (IST) Jun 11
அமித்ஷா சென்னை விமான நிலையம் வந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மின்சார கேபிள் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருவதாக மின்சார வாரியம் விளக்கம் அளித்து உள்ளது.
07:12 AM (IST) Jun 11
மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.அப்போது திடீரென மின் வெட்டு ஏற்பட்டதால் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
07:11 AM (IST) Jun 11
தமிழகத்தை சேர்ந்த தொழில், கலை, இலக்கியம் மற்றும் சமூக சேவையில் சாதித்த 24 பிரபலங்களுடன் இரவு உணவு அருந்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.