சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது.

12:17 AM (IST) Jul 12
பிரதம மந்திரி கிசான் திட்டம் மூலம் மத்திய அரசு விவசாயிகளுக்கு நல்ல செய்தியை கூறியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு இரட்டிப்பு பணம் கிடைக்கும்.
11:27 PM (IST) Jul 11
ரிலையன்ஸ் ஜியோ ரூ.19 மற்றும் ரூ.29 4ஜி டேட்டா பூஸ்டர் பேக்குகளை அறிமுகப்படுத்துகிறது. இதன் முழுமையான விவரங்களை காணலாம்.
10:59 PM (IST) Jul 11
புதுச்சேரியில் மது போதையில் தாறுமாறாக காரை ஓட்டி 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர் சென்னை இளைஞர்கள்.
10:38 PM (IST) Jul 11
வங்கி ஜூலை மாதத்தில் ஒரு சனிக்கிழமை மட்டுமே திறக்கப்படும். அதைப்பற்றி முழுமையாக காணலாம்.
10:18 PM (IST) Jul 11
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
09:19 PM (IST) Jul 11
சிங்கப்பூர் 58 வயதை எட்டியதையொட்டி தேசிய தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.
08:28 PM (IST) Jul 11
அமலாக்கத்துறை இயக்குநரின் மூன்றாவது நீட்டிப்பை உச்சநீதிமன்றம் செல்லாததாக்கியது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
07:44 PM (IST) Jul 11
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. இன்று எந்தெந்த இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம்.
07:30 PM (IST) Jul 11
முன்னாள் ஊழியர் ஒருவர் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனத்திற்குள் நுழைந்து, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
05:57 PM (IST) Jul 11
நடுவழியில் நின்ற ரயிலை இந்திய ராணுவ வீரர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் தள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது உண்மையா? அல்லது பொய்யான வீடியோ காட்சியா? என்பதை இங்கு பார்க்கலாம்.
05:10 PM (IST) Jul 11
தபால் அலுவலகத் திட்டம் மூலம் ஒரு நாளைக்கு ரூ. 50 முதலீடு செய்து, ரூ. 35 லட்சம் வரை வருமானத்தைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
04:52 PM (IST) Jul 11
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கீழ்கண்ட ஐந்து புதிய பைக்குகளை இந்தியாவில் வரும் ஆண்டுகளில் அறிமுகப்படுத்த உள்ளது.
03:29 PM (IST) Jul 11
மாவட்ட பொறுப்பாளர்கள் பனையூர் இல்லம் முன்பு குவிந்த நிலையில், அவர்களை சந்திக்க கருப்பு பேண்ட் மற்றும் ஊதா நிற ஷர்ட் அணிந்தபடி யங் லுக்கில் மாஸ் எண்ட்ரி கொடுத்தார் நடிகர் விஜய்.
02:21 PM (IST) Jul 11
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டுள்ளார்.
12:19 PM (IST) Jul 11
செல்போனில் தம்ஸ்-அப் எமோஜி அனுப்பியவருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
12:19 PM (IST) Jul 11
டிக்டாக் போட் ஜம்பிங் சவாலில் ஈடுபட்ட 4 பேர் கடந்த 6 மாதங்களில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
12:18 PM (IST) Jul 11
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது
12:18 PM (IST) Jul 11
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு இடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் சந்தித்தார்
12:17 PM (IST) Jul 11
திமுக அரசுக்கும் தமிழக பாஜக எம்.எல்.ஏ. மகனுக்கும் என்ன டீல் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது
11:24 AM (IST) Jul 11
வெளிநாட்டு வாழ் இந்தியர் அளித்த புகாரின் அடிப்படையில் சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
10:24 AM (IST) Jul 11
அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. பொதுச்செயலாளர் இபிஎஸ், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.
10:23 AM (IST) Jul 11
அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஈபிஎஸ் நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு இணையதளத்தில் பதிவேற்றியது. பொதுச்செயலாளராக ஈபிஎஸ், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
09:39 AM (IST) Jul 11
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
09:37 AM (IST) Jul 11
பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தற்போது வரை எனக்கு அழைப்பு வரவில்லை. பாஜக தலைவர்கள் எங்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
09:33 AM (IST) Jul 11
தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 18ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
08:32 AM (IST) Jul 11
ஆந்திராவில் அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
07:42 AM (IST) Jul 11
காவேரி மருத்துவமனையில் சீராக நடந்த அறுவைச் சிகிச்சைக்கு பிறகும் ஒரு மாதம் உள்நோயாளியாக வைத்து Bill ஐ தீட்டி அனுப்புவது தான் காவேரி மருத்துவமனை வழக்கமா என ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
06:56 AM (IST) Jul 11
சென்னையில் 416வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.