குடையை மறக்காதீங்க மக்களே.. இன்று தமிழகத்தில் கனமழை பெய்யப்போகுது - முழு விபரம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. இன்று எந்தெந்த இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 12.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.07.2023 முதல் 17.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம், ஈரோடு, திருவளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Fact Check : "ஏ தள்ளு தள்ளு தள்ளு" நடுவழியில் ரயிலை தள்ளிய ராணுவ வீரர்கள் - வைரல் வீடியோ உண்மையா.?