நாகர்கோவிலில் பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11:50 PM (IST) Jul 10
புகழ்பெற்ற விஞ்ஞானியும், முன்னாள் இஸ்ரோ தலைவருமான டாக்டர் கே. கஸ்தூரிரங்கனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
11:30 PM (IST) Jul 10
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
10:42 PM (IST) Jul 10
இந்த 6 வருமானங்களுக்கு வரி பொருந்தாது என்றும், வருமான வரித்துறை இதற்கு விலக்கு அளிக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
10:21 PM (IST) Jul 10
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
10:00 PM (IST) Jul 10
இறந்த நோயாளி ஒருவருடன் நர்ஸ் உடலுறவில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
08:52 PM (IST) Jul 10
பாஜகவினருக்கு எதிராக மதுரையில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
07:52 PM (IST) Jul 10
தமிழக மீனவர்கள் தொடர் கைது விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபரின் இந்திய வருகையின்போது முன்னுரிமை அடிப்படையில் விவாதிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
07:27 PM (IST) Jul 10
நாகர்கோவிலில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
06:53 PM (IST) Jul 10
பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது, இந்தியா 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்ய உள்ளது.
04:39 PM (IST) Jul 10
16 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மகேந்திரா மரோசா காரை டெலிவரி எடுத்துள்ளார் பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா.
03:04 PM (IST) Jul 10
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு உதவும் வகையில், ரேஷன் கடைகளில் தன்னார்வலர்களை நியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது
03:03 PM (IST) Jul 10
ஆளுநரை திரும்பப்பெறும் ஸ்டாலின் கோரிக்கை சரியானதே என மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்
03:03 PM (IST) Jul 10
2024 தேர்தல்: பாஜகவின் மூத்த தலைவர்கள் 10 பேர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
03:02 PM (IST) Jul 10
கர்நாடகா மாநிலத்தில் அன்னபாக்யா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு உடனடியாக பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
03:01 PM (IST) Jul 10
இந்து தம்பதிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சிகர சம்பவம் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது
02:07 PM (IST) Jul 10
மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், தற்கொலைக்கு முயன்ற தன்னை காப்பாற்றியது வடிவேலு தான் என நிகழ்ச்சியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
11:29 AM (IST) Jul 10
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10:41 AM (IST) Jul 10
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் Prevue வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
09:49 AM (IST) Jul 10
பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
08:21 AM (IST) Jul 10
சென்னையில் 415வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
08:20 AM (IST) Jul 10
திமுக நிர்வாகி இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் எம்.எல்.ஏ அய்யப்பன் பங்கேற்றபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குண்டு வீசி விட்டு தப்பியோடியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
08:18 AM (IST) Jul 10
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
07:55 AM (IST) Jul 10
எந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் சர்ச்சையான கருத்தை, பரபரப்பை உருவாக்கி, நெருக்கடியை ஏற்படுத்தும் வேலைகளை ஆளுநர்கள் செய்வதாக விமர்சித்துள்ள செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
07:54 AM (IST) Jul 10
அரசுகள் மக்களிடமிருந்து பெறுகின்ற வரியானது மலருக்கு சுமை தராமல் தேனினை உறிஞ்சும் வண்டின் செயல்பாட்டினைபோல மென்மையானதாக இருக்க வேண்டுமே தவிர, மலரினை காலில் போட்டு மிதித்து கசிக்கிப் பிழிந்து சாறு எடுப்பதுபோல இரக்கமற்ற வன்முறையாக இருந்திடக்கூடாது என சீமான் தெரிவித்துள்ளார்.
07:23 AM (IST) Jul 10
செங்கல்பட்டில் பாமக நகரச் செயலாளர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.